புதன், 21 ஜூன், 2017

பிரம்மை -ஆய்வு


பிரம்மை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

ஒரு வித அறிவு மயக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு, திடீரென்று அருகில் இன்னொரு மெய் அல்லது உடல் தோன்றி நிற்கிறது. அந்த மயக்குத் தெளிந்தவுடன் அம்மெய் மறைந்து போகிறது. இந்தப் பிற மெய்தான் பிற + மெய் = பிறமெய் ஆனது. இந்தப் பேச்சு வழக்குச் சொல்லை எடுத்து "பிறம்மெய்" > பிரம்மெய் என்ற சொல் உருவாக்கி மக்கள் மன்றத்திலே உலவு றுத்தப்பட்டது என்பது உணர்க.

ஒரு விடயத்தில் ( a thing)  சில உள்ளுறுப்புகள்  (factors)  இருக்கும். அந்த உறுப்புகள் அந்த விடயத்துக்கே உரியவையாய் இருக்கும். பெரும்பாலும் இத்தகைய நிகழ்வால் ஓர்  இடரும் தோன்றுவதில்லை. பிற பொருளின் உள்ளுறுப்பு  (external factor ) ஒன்று இவ்விடயத்தில் வந்து கலந்துவிட்டால் "பிற சினை" வந்துவிட்டது என்கிறோம். அதற்கு இனமல்லாத வேற்று உறுப்பு புகுந்து விட்டது. இதனால் "பிறச் சினை" ஏற்படுகிறது. அதுவே பிரச்சினை ஆகிறது. அதாவது பிற உறுப்பு வந்து இடர் விளைக்கிறது என்று பொருள். இதைப் பிரச்சினை என்பதை விட "பிறச்சினை" என்பதே உண்மை நிலை காட்டுவதாகும். இங்கும் அப்படியே வேறு இடுகையில் எழுதியுள்ளோம். இதில் இலக்கணப் புலவர் ஒரு மறுப்புத் தெரிவிக்கலாம். நடுவில் ஒரு சகர ஒற்றுத் தோன்றாது என்பதே மறுப்பு ஆகும். இது புதுச் சொல்லமைப்பு ஆதலின் இயல்பான புணர்ச்சி இலக்கணங்கள் இதற்கு ஏலாதவை என்று இம்மறுப்பைக் களைந்து விடுக.

இதைப் போலவே பிற மெய் எனற்பாலது பிரம்மை என மகர ஒற்றும் மிக்கு வந்து ஒரு புதிய சொல் அமைந்தது என்பது கண்டுகொள்க. இவை பேச்சு வழக்குச் சொல்லிலிருந்து கல்லி எடுக்கப்பட்டவையாதலின், மறுப்புகள் எழா.

பொய்ம்மெய் என்பதிலும் மெய் என்பது மை என்று திரிந்து பொம்மை ஆனதை மொழிநூலார் சுட்டியுள்ளனர்.

பெரு + மெய்  என்பதே  பிரம்மை என்றானது என்று  சிலர்  நினைப்பர் . பெரிய மெய் (உடல் ) முன் தோன்றுதல் -  எனினும் தமிழே    மூலம் .  



Tamil text editor could not render the author's  feed in   properly.

திங்கள், 19 ஜூன், 2017

stopping urinating in public results in murder!!

இழுத்தோடும் வண்டிக்  காரன்
இவன்பக்கல் வந்தான் "தம்பீ
கழிக்காதே நீரை யாரும்
காணப்பல் லோர்முன் என்றான்;
ஒழித்தேன்நான் உன்னை என்றே
ஓய்ந்தேனும் நோக்கான் ஆகி
அழித்தான்தபின் நில்லான் அந்தோ!
அகிலமும் செல்வ தெங்கே


Murders take place all over the world for many reasons.  A Rickshawala stopped someone
from urinating in public. That person turned round and killed the poor rickshawala for
saying it to him.

http://www.straitstimes.com/asia/south-asia/modi-demands-swift-punishment-for-murderers-of-rickshaw-driver-who-tried-to-stop?utm_source=Outbrain&utm_medium=CPC&utm_campaign=Test&xtor=SEC-23



ஞாயிறு, 18 ஜூன், 2017

Go to heaven now? சொர்க்கத்தைத் தாக்கிச் சில அறிவாளிகள்

எங்கே சொர்க்கம் என்று எல்லோரும்
 தேடிகொண்டிருப்பதாகச் சில சிந்தனையாளர்கள்
கிண்டலடிப்பதுண்டு.  எனக்குத் தெரிந்த வரை யாரும்
இப்படித் தேடிக்கொண்டு சாமி கும்பிடுவதாகத்
தெரியவில்லை.    ஓர்  அம்மையாரைக் கேட்டால்
அவர் மகன் நன்றாகப் படித்துத் தேர்வில்
வெற்றிபெற வேண்டும் என்று சாமிக்கு விளக்குப்
 போடுவதாகச் சொல்கிறார்.  சொர்க்கத்துக்குப் போவதற்காகச்
 சாமி கும்பிடுகிறேன் என்று சொல்வதில்லை.
இன்னொரு பெண்மணி என்ன வேண்டிக்கொள்கிறார்
என்றால் தம் கணவர் தம்மிடம் அன்பாக இருக்கவேண்டு
மென்பதற்காகச் சாமி கும்பிடுவதாகச் சொல்கிறார்.
புதிதாக ரொட்டிக்கடை வைத்தவர் கடை
நட்டமில்லாமல் ஓடவேண்டும் என்று
 வேண்டிக்கொள்கிறார்.   எல்லா விண்ணப்பங்களும்
இவ்வுலகில் தங்களுக்கு நிறைவேற வேன்டியவை
பற்றியனவாகவே உள்ளன. " நான் சொர்க்கம் செல்ல
 வேண்டும் "   என்று யாரும் கும்பிட வில்லை.

"சொர்க்கம்"   எப்போது வந்து "சாமி  கும்பிடுவ"   துடன்
இணைகிறது என்றால் யாராவது வீட்டில் இறந்துவிட்டால்
 அதற்கான சடங்குகளைச் செய்யும்போது
இறந்தவர் சொர்க்கம் செல்லக் கும்பிடுங்கள் என்று
 கும்பிடும் நிலையில்தான்.
 தமக்குச் சொர்க்கத்தில்   நம்பிக்கை
இல்லாதவரும் இத்தகைய சடங்குகளின்போது
கையெடுத்துக் கும்பிடுவதுண்டு.  ஆனால்
அப்போது சொர்க்கத்தைப் பற்றிய தீவிரச்  சிந்தை
 ஏதும் தோன்றுவதில்லை. சொர் க்கம் இருக்கிறதா
 இல்லையா என்பது  வேறு வேலையில்லாத
பகுத்தறிவுவாதிக்கு ஒரு பிறச்சினையே தவிர
சாமி கும்பிடுகிறவர்களுக்கு இல்லை.
சடங்குகள் செய்யும் பூசாரிகூட இதைப்பற்றிக்
கவலைப் படுவதில்லை.

பூசாரிக்கு அது வேலை.  சடங்குகளை முடித்துவிட்டுச்
சம்பள த்தை வாங்கி க்கொண்டு போய்விடுவார்.
இறந்தவர் வீட்டில்  இறந்தவருக்கு அந்தச் சடங்குகளைச்
செய்து முடித்துவிட வேண்டும் என்ற நிலை.  யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அலட்டிக்கொண்டு இருப்பவன் பகுத்தறிவுவாதிதான். இவன் பேசுவது ஒரு நேரம்
போக்கும் வேலையாகி விடுகிறது.  இப்  பேச்சு  இவனுக்கே பெரும் கவலையைத் தருகிறது.

இருப்பவர் எவரும்  தனக்குச் சொர்க்கம் வேண்டும் என்று
 கும்பிடுவதில்லை. இறந்தவர்க்கு ஏதேனும் செய்ய
முற்படுகையில்தான் சொர்க்கம் பற்றிய கொள்கை
தலைப்படுகிறது.  இறப்புக்குப்பின் ஒரு வாழ்நிலை
 உண்டா என்கிற ஆய்வு ஆன்மீகச் சிந்தனையாளனின்
கருத்திற்கு உட்பட்டது.  அது மக்களை ஆட்படுத்தும்
அல்லது ஆளும் கருத்தன்று. அது ஒரு பின்புலக்
கருத்துத்தான். அதனால் பகுத்தறிவுவாதி அதன்பால்
தொடுக்கும்  தாக்குதல், ஒரு குமுகப் பிறச்சினையை
அல்லது புரட்சியை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.


சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்ற
 வாதம் எழுமானால் இருந்தாலும் இருக்கலாம்
 என்பதே பலரின் நிலை  ஆகும். உண்மையில்
 இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சொல்ல
முடிவதில்லை என்பதுபோலவே இல்லை
என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.
அது இறந்தபின் உள்ள நிலையாதலால்  இருப்பவரைப்
பாதிப்பதில்ல்லை.  சொர்க்கம் என்பது
ஒரு நம்பிக்கைப் பொருள்.


இப்படி வாதத்தில் நழுவு பொருளாக உள்ள சொர்க்கம்
இந்து மதத்தில் முற்றிலும் நழுவி நிற்கிறது.  இதற்குக்
காரணம், மனிதன் இறந்தபின் இந்து மதத்தில் மறுபிறவி
கொள்கிறான்.  பிறப்பறுத்தபின் தான் முற்றிலும் இறையுடன்
இணைகிறான்.  ஆகவே சொர்க்கத்தைத் தாக்கிச் சில
அறிவாளிகள் புனைந்த கருத்துக்கோவைகள்  புள்ளி இழந்த   கருத்துக்களாகிவிட்டன.

You may like:

https://sivamaalaa.blogspot.sg/2015/01/blog-post_15.html


Your preview failed to load

Please close this window and try again.