திங்கள், 28 ஜூலை, 2014

வேண்மாள் நல்லினி மகன் இமயவரம்பன் & கண்ணனார்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ தகை சால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  பிறர்க்  குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

இது பதிகம். அழகாகப் பாடப் பெற்றுள்ளது. பனிமலை வரை சென்று தன் வில் கொடி பொறித்து, ஆரியரை அடக்கித் திறை பெற்று, யவனர் கொண்டுசெல்ல  முயன்ற வயிரங்களைப் பறிமுதல் செய்து ஒரு பழைய ஊருக்குக்குக் கொடுத்து,  மற்றொருக்கும் உதவிகள் செய்து,ஏனைப் பகைவரையும் அழித்த இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பத்துப் பாடல்களால் குமட்டூர்க் கண்ணனார் பராட்டி யுள்ளார்.

அடுத்து அணுக்கமாக அறிந்துகொள்வோம்.  தொடரும்.


மாறாத இன்ப மயம்.

Hari Raya Greetings to all who are celebrating.

In our minds at this juncture is our thought for the loved ones of air crash victims  MH 370 and MH17.

Test and hurdles can help strengthen resilience  ( the Prime Minister of Malaysia).

We must stand together to face any challenge.

"In line with the advice of the Prime Minister......... Reject extremist bickering  and disunity,   People should instead appreciate the harmony  that Malaysian leaders and independence  fighters had won for the nation. We must always remember that we can live together  in harmony despite the many different races which make up Malaysia"  -- Datuk Seri Liow Tiong Lai, President,  Malaysian Chinese Association and  Malaysian Minister of Transport.  The Star, 28.7.2014.

இப்போது இதற்கு ஒரு பாட்டு:


எல்லா இனங்களும்  இங்கொன்றாய்  வாழ்வதற்குச்  
சொல்லால் செயலால் அனைத்தையும்  ---- நில்லாமல் 
நேராய்  நிறைசெயின்  சீராகப்  பாரிதனில் 
மாறாத  இன்ப  மயம். 

ஞாயிறு, 27 ஜூலை, 2014

அரியணை வேண்டாத அரிசில் கிழார்

அரிசில் கிழாருக்கு அரசன் இரும்பொறை அளிக்கவந்த பரிசிலை அவர் மறுத்து, அவனுக்கு அமைச்சராய் உதவ மட்டும் ஒப்புக்கொண்டார்.  அதுபற்றிய செய்தியைக் கவிதையாகத் தருகிறேன்.


அழகிய பத்துப் பாடல்
அரிசிலார் முடித்தார் பாடி;
இழுமெனும் இனிய ஓசை
எழில்நடை விருந்தால் வேந்தன்
முழுவதும் கவரப் பெற்று
முன்பரி  சோடு வந்தான்;
வழுவறு கோயில் சார்ந்த‌
வள்மெலாம் கொள்க என்றான்.

"காணமே ஒன்பது நூறி
னாயிரம் அரசு கட்டில்!"
யானுமை இரந்து கேட்பேன்,
யாண்டும் நீர்ஆள்வீர்!  கொள்வேன்
கூனிலா அமைச்சே மன்னா
குறையொன்றும் இல்லை என்ன,
வான்புகழ் இரும்பொறைக்கோ
வண்டமிழ் அறிஞர் வாய்த்தார்.

குறிப்புகள் :

இங்கு சொல்லப்படுவது  பதிற்றுப் பத்தில் உள்ள அரிசிலாரின் பத்துப் பாடல்கள்.
வழுவறு =  ஒரு சேதமும் அற்ற.
கோயில் -  அரண்மனை . (அது  சார்ந்த   இடங்கள் நிலங்கள்  மற்றும் அரியணை..)
வளம் எலாம் -  வளமும் எல்லாமும் 
காணமே ஒன்பது நூறி னாயிரம் = ஒன்பது இலக்கம் காணங்கள் (பொற்காசுகள்) 
அரசு கட்டில் - சிம்மாசனம்.
 இரந்து கேட்பேன், - தாழ்ந்து  பணிந்து கேட்டுக்கொள்வேன்.
கூனிலா  -  குறைவற்ற 
 என்ன =  என்று  சொல்ல. 

இரும்பொறையின் நோக்கில் அரிசிலார் பாடியவை விலைமதிப்பற்ற தமிழ்.
ஈடாக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான். ஆனால் இறுதியில் அரிசிலார் மூலம் தமிழையே அமைச்சாகப்  பெற்றான். இதில் பெரிய பரிசு இரும்பொறைக்குத்தான்.அன்றாட தமிழ் விருந்து  அரசியல் அறிவுரையுடன் அவன் பெற்றான்.