வியாழன், 22 மே, 2014

படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு  உறுப்பினர்கள் சிலர் கைது.

http://www.voanews.com/content/crisis-talks-continue-in-thailand/1919959.html


ஆட்சி அமைத்தார் படைத்தலைவர் ;  ஆகையால் 
மீட்சி  எதிர்தரப்பு மேற்றாகும் ---- வீழ்ச்சி 
அடையும் எனச்சொல்வார் ஆண்டோர்  தரப்பாம்  !
உடைவதோ மக்கள் அணி ?


குறிப்புகள்:

மீட்சி  -  மீண்டும் அதிகாரத்துக்கு வருதல் போன்ற  நடவடிக்கைகள்.
எதிர்தரப்பு  -  opponents to the last ruling govt which was deposed.
மேற்று  -  மேலது ,  சேர்ந்தது  (ஆகும்).
ஆண்டோர்  தரப்பு:   முன்னைய அரசு சேர்ந்தவர்கள்.
மக்கள்  அணி  -   ஜன நாயக அணி   மக்கள் ஆட்சி அணியினர்.

 படைத்தலைவர்  -  refers to the Army  General and his command who staged the coup. 




புதன், 21 மே, 2014

திரிபு அடைவனவும் அடையாதனவும்

புகையிலை என்ற சொல் போயிலை என்று திரிந்து  வழங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புகையிலை என்பது எழுத்தில் மட்டும் வழங்குவது. பேச்சில் பெரிதும் "போயிலை" என்பதே ஆட்சி செய்கிறது.

ஆனால், புகை என்ற தனிச்சொல் போ என்று திரிவதில்லை. கூட்டுச் சொற்களைப் பார்த்தல்,  எல்லாக் கூட்டுச் சொற்களும் திரிவதில்லை. புகைவண்டி என்ற சொல், போவண்டி என்று திரிவதில்லை.

அதுபோலவே. புகைமூட்டம்,  புகைமண்டலம், புகைக்கூடு முதலியவை திரியவிலை.

ஒரே சொல் சிலவிடத்துத் திரிந்தும் சிலவிடத்துத் திரியாமலும் வழங்கும்.

திங்கள், 19 மே, 2014

Revelation of tea shop connection


தேநீர் செயும்பையன் என்றார் அவர்மொழியின்
வீணீர்மை விண்ணெரி தீ.   (1)

எடுபடாப்  புன்மொழி எங்கும் இயம்பிக்
கெடுபடல் காத்தல் கடன். (2)

யாவரும் மன்னரே மக்கள் ஆள்  மாண்பினில்
தேதரும் தீதிலார் காண்.  (3)

பொருள் :

இது பிரதம மந்திரி மோடி அவர்களைப் பற்றிய சில வரிகள்.

1.  தே நீர் =  tea. செயும் =  செய்யும். வீணீர்மை =  வீண் தன்மை . விண்ணெரி = ஆகாயத்தில்  எரிகின்ற நெருப்பு  போன்றது.  ஆகவே வீண் பேச்சு என்பது எல்லோருக்கும் தெரியும் .

2 எடுபடா = மக்கள் ஏற்க முடியாத . புன்மொழி = கீழ்த் தரமான பேச்சு . இயம்பி - சொல்லித் திரிந்து.  கெடுபடல் = தீமையுட் படுதல். காத்தல் = (கேடின்றிக்) காத்துக் .  கொள்ளுதல்.  கடன் = கடமை.

3.யாவரும் = எல்லாக் குடிமக்களும் .  மக்கள் ஆள் = மக்கள் ஆட்சி (செய்யும்)  

 தே தரும் -       தே நீர் விற்கும் .  தீதிலார் = தீமை இல்லாதவர்கள். 

Even with the revelation that Mr Modi was a tea boy and that he was marred but not with his wife now,  the Congress still lost.



`