Treatment of other persons and creatures....
Th14112010@51#
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
தமக்கு வந்த துன்பம்போல் கருதிச் செயல்படாதவிடத்து.....
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை.
(315)
அறிவினான் = அறிவினால்; ஆகுவது = விளையும் பயன்;
உண்டோ = ஏதும் உள்ளதோ; பிறிதின் நோய் =
வேறோர் உயிரின் நோயை அல்லது துன்பத்தினை ; தம் நோய் போல் = தமக்கு வந்த துன்பம்போல், போற்றாக்கடை = கருதிச் செயல்படாதவிடத்து எ-று.
எனவே, பிற உயிர்கட்கு இன்னா செய்தலாகாது , அதுவே அறிவுடைமை என்கிறார் நாயனார்
தென்னை மரம்பற்றிய சொற்கள்----------------------------
தென்னை என்ற மரப்பெயரில், ஈற்றில் நின்ற "ஐ" விகுதியாகும். எனவே. சொல்லின் பகுதி: "தென்" என்பதே.
தென் என்ற அடிச்சொல், தென் திசையையும் குறிப்பதால், தென்னை தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமென்பர். அது நிற்க:
தென் > தென்னை.
தென் > தெங்கு. (தென்+கு > தெங்கு.)
திசையைக் குறிக்கும் தென்+கு என்ற புணர்ப்பு "தெற்கு" என்று வர, மரத்தைக் குறிக்கும் தென்+கு என்பது தெங்கு என்றானது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சொல்லாக்கத்தில் வெவ்வேறு சொற்களைப் படைக்க, வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான்.
இவற்றைக் கூர்ந்து கவனிக்காமல், வாதங்கள் செய்வதில் பயனில்லை.
இதை இப்படிக் காட்டாமல், மாற்றுவழியாக:
தென் > தெம் > தெங்கு எனலாம்.
இது ஓர் உத்திதான்.
தெங்கு+ காய் = தேங்காய்! தெங்குக்காய் என்று வரவில்லை! ஏன் வரவில்லை ? (ஆனால் தெங்கங்காய் என்று கவிதையில் வரும்).
தெம் என்ற திரிபு அடியின் முதல் நீண்டது என்று சொல்லலாம்.
தென்காய் > தேன்காய் > தேங்காய் ஆகலாமே! அப்படியானால் இடையில் ஏன் தேன் வழிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?
தென் > தெம் > தேம் > தேம்+காய் > தேங்காய் என்று மடக்கலாம். அதுவும் ஒரு தந்திரம்தான்.
தென்னை+தோப்பு , இது தென்னைத் தோப்பு என்று வராமல் தென்னந்தோப்பு என்றன்றோ வருகிறது.
"தெங்கு நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்" -- நன்னூல், 186.