ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சீனி

சீனி என்ற தமிழ்ச்சொல் தமிழ் நாட்டில்  மெதுவாக மறைந்துவருகிறது போலும்.  தமிழகத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் sugar என்கிறார்கள்.  இனிப்பு  நோயாளிகளும் sugar ஏறி விட்டதென்று சொல்வர்.

சீனி என்ற சொல் எப்படி வந்தது  அறிந்தால்,  ஒருவேளை அச்சொல்லை மிக  விரும்பிப்   பயன்படுத்துவரோ என்னவோ`!

எதற்கும் நாம் அதை அறிந்துகொள்வோம்.

கற்கண்டு சற்று பெரிய கட்டிகளாக வருகின்றது.  சீனி  தூள் செய்யப்பட்ட கற்கண்டு தான். ஆகவே அது சிறு துகள்களாக இருப்பது.

இதுவும் சில்  அடிச்சொல்லிலிருந்து வருகிறது என்பர். Pl see chinthu and chillaRai , previous posts.

சில் >  சின் >  சீன் > சீனி .

சின்னவன் சின்னப்பன் முதலிய சொற்களில் சில் > சின் என்று திரிகிறது.

சின்  > சீனி   {முதனிலை நீண்டது.).

இதுபோன்று முதலெழுத்து நீண்ட சொற்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள்.

இங்ஙனம்  அன்றி ,  தமிழறிஞர் க. ப  மகிழ்நன் (    K.P. Santhosh )  (1948)    இது  சீனாவிலிருந்து வந்தமையால்  சீனி என்று பெயர் பெற்றது என்கிறார். இந்தப் பிற்கால ஆய்வினை அவர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு வகையிலும் பொருத்தமாய் அமைந்தது இச்சொல்.  சில வகைக் காய்கறிகள், சிறிய உருவில் இருப்பதால் சீனி என்ற அடைமொழி பெற்று குறிக்கப்பட்டன.  ஆனால், சீன வெடி, சீனாக் கற்கண்டு, சீனத்துக் கிளி
என்ற சுட்டுகைகளையும் கவனிக்கவேண்டும்.

Neither is wrong.   

சில்லறை



சில்லறை என்பதைக் கவனிப்போம்.

சில் என்பது சிறுமை குறிக்கும்  ஓர் அடிச்சொல்.

அது சிந்து என்ற அழகிய சொல்லமையத் தன்னை ஈந்தது.  அதை முன் இடுகையில் கண்டோம்.

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_996.html

சிறு என்பதும் சில் என்பதன் திரிபே.

"அந்த வெடிவிபத்தில் ஒரு சில் வந்து அவனைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியது."

சில் - பெயர்ந்து வரும் சிறிய கல் .

சில் என்பது தானே ஒரு சொல்லாகவும் நிற்கும் ; ஏனைச் சொற்களுக்கு அடிச்சொல்லாகவும் வரும்.

சில் + அறு +ஐ   =   சில்லறை ,   சிறிது சிறிதாய் "அறுக்கப்" பட்டதென்று பொருள் .

Room எனப் பொருள் படும் அறை என்பதும் "அறுக்கப் " பட்டதென்றெ பொருள்தரும் .

குறிப்பு:

அர்த்த  -  இது பாதி என்று பொருள் தரும்.  இதுவும் "அறுத்த"  என்பதன் திரிபே என்று தமிழறிஞர்  சிலர் கருத்துரைத்துள்ளனர்.  எ-டு  :  அர்த்தயாமம் 

சிந்து

இனி சிந்து என்ற சொல்லினைப் பார்ப்போம்.

தமிழில் சிந்து என்றால் இயல்பான அளவிற் குறைந்தது என்பது பொருள்.

எடுத்துக்காட்டாக,ஒரு கவிதையில் ஓர் அடிக்கு 4 சீர்கள்  இருக்கவேண்டும். மூன்றே சீர்கள் இருந்தால் அது சிந்து எனப்படும்.

பாட்டுக்கு / ஒருபுலவன் /  பாரதியடா.

இது சிந்து.

இதன் அடிச்சொல் சில் என்பது.    சில் ‍   சின்   சிந்+ து.  சிந்து.

இது பின் ஆற்றின் பெயராகவும்  இந்து என்று மாறி ஓர்  இறை நெறியின் பெயராகவும் வந்துள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------
This post was lost  and so much has been retrieved,

-----------------------------------------------------------------------------------------------------------

note:
A discussion on Sindhu

http://forumhub.com/tlit/13516.8379.22.07.56.html