சுரோணிதம் என்ற சொல் நம் அன்றாட வாசிப்புகளில் அடிக்கடி எதிர்கொள்ளும் சொல்லன்று. பட்டினத்தடிகளின் பாடலில் இது வருகிறது. அந்தப் பாடல் திரையில் ஒலிக்கவே, ஓரளவு புழக்கத்திற்கு வந்தாலும், பலரும் அறியாத சொல்தான்.
இது பெண்ணின் கருப்பையில் தங்கி குழந்தை உருவாகப் பெண்ணின் பங்காக அமையும் ஒரு நீரைக் குறிக்கிறது.. இது எங்ஙனம் அமைந்தது என்று காண்போம்.
சுர + ஒண் + இது + அம் = சுரோணிதம்
ஒண்மை - ஒளி அல்லது உயர்வு குறித்தது. இது பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது
ஒப்பீடு:
சில்+எடு +ஐ = (சிலெடை) > சிலேடை. லெ > லே ( நீட்சி ) சிலெடை என்பது சிலேடை என்று திரிந்தது வாயொலிக்க எளிமை .தரல்பொருட்டு அதுபோல சுர + ஒண் = சுரொண் > சுரோண் ஒ > ஓ (நீட்சி ) ரொ > ரோ .
இது அது என்பன சொல்லாக்கத்தில் பயன்பட்டுள்ளன. எ-டு பரு+ அது + அம் .
பருவதம் என்பதுபோல.
சுரக்கும் உயர்வான நீர் அல்லது பொருள் என்று அர்த்தம். இது சினைமுட்டையைக் குறிப்பதுபோலும். (ovum ).
இது தொடர்பான சங்கதச் சொற்கள் வருமாறு: ஷொடர்துநிஷா SoDazartunizA ஸ்ரீ தர்ம strIdharma ஸ்ரீ தர்மிணி strIdharmiNI ஸ்ரீ ரஜஸ் strIrajas