கணிணியில் கோளாறினால் சில வேளைகளில் நாமேழுதுவது தொலைந்துவிடுகிறது! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த வெண்பாக்கள் தோன்றின.
தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.
(பொருள்: தான்தொலையா நிற்றலுறும் - தான் தொலையாமல் நிற்கும். விட்டச்சம் - அச்சம் விட்டு என்று முறைமாற்றிப் பொருள்கொள்க. )
திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.
(இது இணையதளத்தில் அதைப்படித்தவர்கள் வைத்திருந்தால் தந்துதவும்படி வேண்டுகிறது.
ஆங்கு = அங்கு ; ஈங்கு = இங்கு
உறுத்தி உளைச்சல் உளத்தே - உளத்தே உளைச்சல் உறுத்தி என்று முறைமாற்றுக, )