வெள்ளி, 7 நவம்பர், 2008

வியாபாரம்

வியாபாரம்
----------

வில் > விலை
வில் > விற்பு > விற்பு+அன்+ஐ > விற்பனை.
வில் > வில்+தல் > விற்றல்.
வில் > விற்க.

வில் என்பதே வினைச்சொல் - ஏவல் வினையும் வினைப்பகுதியுமாகும்.

பேச்சு வழக்கில் "வில்" என்று சொல்லாமல் " விய்" என்று சொல்வர்.

வில் என்பதற்கு ஈடாக "விய்" பேச்சுவழக்கில் வழங்குகிறது.

விய் > வியா.

கல்> கலா, நில் > நிலா என்பன காண்க. வியா ( ஆ) என்பது ஒரு சொல்லீறு.

பர > பரத்தல்.
பர > பார்.
பர > பார் > பாரம். (பரவலாக அல்லது பரந்து செய்தல் குறிக்கும்.

வியா + பாரம் = வியாபாரம். - பல இடங்களுக்குச் சென்று அல்லது பொருளைக் கொண்டு சென்று விற்றல் குறித்தது. "பரந்து விற்றல்".

வியாழன், 6 நவம்பர், 2008

ஒரு திரைப்பாடற் கருத்து - வெண்பாவாக.

பூமிக் கொளிபாயும் கோமகள் கண்விழித்து;
பூவிற் கவள்முகம் மண்ணியதால் --- மேவுபனி; 
பல்லைத் துலக்கின் நுரையாம்் பரவைக்கே; 
என்னைத் தழுவின் மழை.


நண்பர் ் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை
வைத்துக்கொண்டு இப்படி மாற்றினேன்்.


 கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற 
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை 
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே 
இதழ்வாய் அணைக்கும் மழை. 

 வெட்டம் = வெளிச்சம்; ( ஒரு நண்பருக்காக எழுதிக் கொடுத்தது).

புதன், 5 நவம்பர், 2008

கவிதையைச் சிதைத்து வந்த வெண்பா...!

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.