By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 30 மார்ச், 2025
அசோகப் பேரரசன் காலத்துத் தமிழ்த் திரிபுகள்
சனி, 29 மார்ச், 2025
TAMIL FOR SCANNING: உறுவித்தல்.
எல்லா விவரங்களையும் உள்ளடக்கி எடுத்து வைத்துக்கொள்ளுதல் என்று இதற்குப் பொருள் சொல்லலாம். ஸ்கேன்னிங் என்பதற்குப் பதினாங்காம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு பொருட்சாயல்கள் ஏற்பட்டுப் பயன்பாடு கண்டுள்ளன என்பது ஐரோப்பிய அறிஞர்கள் கூறுமுகத்தான் தெரியவருகின்றது.
ஓர் இயந்திரத்தில் நாம் கொண்டுபோய் ஏற்றும் தாளிலிருந்து எடுத்துக்கொள்ளுதல் என்பது நாம் செயல் முறையில் கண்டுகொள்ளும் பொருளாகும்.
இதற்குத் தமிழில் உறுவித்தல் என்ற சொல்வது மிக்கப் பொருத்தமாகும். உறுதல் என்ற சொல் நெடுங்காலமாக வழக்கில் இருந்த சொல். ஒன்றில் மற்றொன்று படுதல், அல்லது தொட்டுத்தொடர்பு கொள்ளுதல் என்பது இதன் பொருள்.
இது என்னவென்றால் தொடர்பு படுத்தி மேலேற்றுதல். ஒரு இயந்திரம் தாளைத் தொட்டவுடன் தாளிலுள்ளது இயந்திரத்துக்குள் ஏறிக்கொள்கிறது. இயந்திரம் அதைப் பதிந்து இங்கோ வேறிடத்திலோ வேண்டியபடி கொண்டுதருகிறது.
உறுதல் தன்வினை உறுவித்தல் பிறவினை. உறுவித்தல் என்பதன் மூலம் இதே கருத்து நமக்குக் கிட்டுகின்றது.
வி என்ற விகுதியை இணைப்பதன் மூலம் நாம் தமிழில் இதை எளிதாகச் செய்துவிடலாம்
FURTHER READING:
If you have the time, you may wish to read this as well:
https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_19.html
மேற்கண்ட இடுகை மகத்தான என்ற சொல்லை விளக்குகிறது. கோடிட்ட பகுதியைச் சொடுக்கி வாசிக்கவும். Click the underlined entry above and it will take you to the post.
வியாழன், 27 மார்ச், 2025
சிக்குதல் வினைச்சொல் வந்தது எப்படி?
வியாழன், 20 மார்ச், 2025
அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்
இன்று அதிசயம் ஆச்சரியம் ஆகிய சொற்களின் தமிழ் மூலங்களைக் காண்போம்.
தமிழ் வீட்டினதும் அரசனினதும் மொழியாய் இருந்தபோது சமஸ்கிருதம் என்பது தொழுமொழியாய் விளங்கியது. அரசன் கட்டிய கோயில்களிலும் வீட்டுக்கும் வெளியில் நிகழ்வுறும் சாமி கும்பிடும் நிகழ்ச்சிகளிலும் சமஸ்கிருதம் வழங்கியது. முதலில் ஒலியைக் கொண்டு இறைவனை வணங்கும் முறை மக்களிடை இருந்தது. இந்த ஒலிகள் முதலில் ஏடுகளில் இல்லை. வெகுகாலம் ஏட்டுப்பதிவில் இல்லாதிருந்து ஒலிகளையும் இணைந்திருந்த தொழுமணிகளையும் (verses of vEdas ) மறக்கத் தொடங்கி, பலவற்றை இழந்தபின்பே இவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்பட்டுப் பதிவிடல் தொடங்கிற்று. பதிவிடலால் ஒலிகளைச் சரிவரச் சொல்வதற்கு எந்த உதவியும் வரவில்லை. தெரியாதவர்கள் படித்து நன்கு சொல்லமுடியாமல் கெடுத்ததனால், பலர் இந்த எழுத்துமுயற்சிகளை ஆதரிக்கவில்லை. அதனால் சமஸ்கிருதத்திலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. எஞ்சியதையே வேதவியாசன் பணியினால் நாம் பெற்றுள்ளோம்.
அதற்கென்று போற்றி வைத்திருப்போரை நேமிக்க வேண்டி இருந்தது. ( காப்பியக் குடிபோன்ற பிரிவினர் தோன்றி மொழிகாத்து வேண்டிய நூல்களை இயற்றினர்.)
ஒரே களத்தில் இயங்கிய காரணத்தால் சமஸ்கிருதம் தமிழ் முதலிய பல பொதுச் சொற்களைக் கொண்டிருந்தன. கடன்வாங்கிய சொற்கள் என்று குறிப்பதெல்லாம் இதை அறியாமையே ஆகும்.
அதிசயம் ஆச்சரியம் முதலிய சொற்கள் சமஸ்கிருதம் எனப்படுவன, அவற்றின் மூலச் சொற்களைக் காண்போம்.
மிக்க வியப்பான ஒன்றைக் கேள்விப் பட்டவுடன், ஒருவிதச் சாய்வு உண்டாகிறது. மனம் அந்தச் செய்தியின் பால் சாய்ந்து, சிலர் நம்புவதும் சிலர் நம்பாமையும் ஏற்படுகிறது, இது நேரன்மை ஆகும், அதாவது சாய்வு, மனச்சாய்வு.
அதி சயம் என்பதில் சாய் + அம் > சயம் என்று முதனிலை குறுகிச் சொல் அமைகிறது. மனிதன் வியப்பின் பக்கம் சாய்வு கொள்கிறான்.
ஆச்சரியம் என்ற சொல்லிலும் சாய்வுக் கருத்தே உள்ளது, சரிதல் என்பதும் சாய்வுதான். சரி + அம் > சரியம் ஆகிறது.
ஆதலின் சரிதல் ஆச்சரியம் ஆகும். அதாவது வியப்பு, சாய்தல் என்பதும் அது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
தொடர்புடைய பதிவுகள்:
https://sivamaalaa.blogspot.com/2015/10/chayanam.html
அனந்த சயனம்
https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html
சயனம் சயனி ஆந்தசயனம்
https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html
சங்கதத்தில் தமிழ்\\
https://sivamaalaa.blogspot.sg/2015/10/chayanam.html
அனந்த சயனம்
YOUR ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.
செவ்வாய், 18 மார்ச், 2025
புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.
வெள்ளி, 14 மார்ச், 2025
நிமிடம் என்ற சொல்.
நிமிடம் என்ற சொல்லைச் சற்று விளக்கமாக்குவோம்.
இமை என்பது நிமை என்று திரியும் என்பது தமிழாசிரியரிடம் கருத்தாக இருந்துள்ளது. இது பிறழ்பிரிப்பாலும் அல்லது திரிபாலும் நிகழலாம். பிறழ்பிரிப்பானால் இதை இவ்வாறு காட்டுக:
கண்+ இமை > கண்ணிமை > நிமை . கண் என்ற ஈரெழுத்து மறைவு. இதை முதற்குறை என்னாமல் ஒருவகைத் தொகுப்பு என்னலாம். "ணி" முதலெழுத்தாகாதபடியால் "நி" வந்தது.
இமை இடுதல் என்பது நிமை இடுதல் என்றாகும்.
நிமை + இடு + அம் > நிமிடம்.
நிமை என்ற சொல் தன் ஐகார இறுதியை இழந்து, நிம் என்று நின்று "இடு + அம்" என்றவை புனைவுற்றது.
ஏனைக் கருத்துகளுக்கு வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_9.html.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post.
திங்கள், 10 மார்ச், 2025
குறைபட்ட இந்தப் புவி வாழ்வு
இரவொன்று வாராமல் பகலே வந்த
இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,
தரவேண்டும் என்றெண்ணும் பகலோன் தானும்.
தகவளந்து தருதற்கோ இயல்வ தில்லை!
பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்
பரந்துவாழும் மக்களிடை நிலவும் சூழல்,
குறைவாழ்ந்த திலையென்று நினைத்திட் டாலும்
குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.
\
உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை. அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும். இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம். பாவம் இவள். இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது.
பொருள்:
தகவளந்து - தகுதியை அளந்து அறிந்து
பரவு ஓங்கும் - மிகுந்த பரப்புடைய
குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து
குறைவு ஆழ்ந்த - குறைகள் பலவுடைய
இலை என்று - இல்லை என்று
தலைசாய்ந்தார் - தற்கொலைக்கு ஆட்பட்டார் ( இடக்கரடக்கல்)
மகமும் மிருகமும்
சனி, 8 மார்ச், 2025
வந்தனமும் வணக்கமும்.
வந்தனம், வணக்கம் என்ற இரண்டு சொல்லையும் இன்று ஆய்வு செய்வோம்.
வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந் என்பது. வணக்கம் என்ற சொல்லின் வண என்பது உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது. இதை ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால் வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும். ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு. வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி. வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய் அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான். யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை. அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப் பதிவுகொண்டு அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.
வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால் :
வந் > வந்தனம்,
வண் > வணக்கம் என்னும் போதுதான்.
வந், வண் உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.
எப்படி முடியும். :இணக்கம்
அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும் அணுக்கம் என்ற சொல்லில் உள்ள அண் என்ற அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம் வண் என்பதும் வந் என்பதும் வளைவு காட்டுபவை. இரண்டும் ஓரின எழுத்துக்கள். ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை. இவை பெரிய வேறுபாடு உடையவை அல்ல.
இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல், வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான் அன்றி வேறில்லை. வண் என்பதும் அது. இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்) வந்தனம் ஆகிவிடுகிறது. எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..
இவ்வாறு இவை உறவுச்சொற்கள். சமஸ்கிருதம் என்பது தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்,
Copyright for this post is waived.
You may share this through any social media.
[ This post had been attacked and errors had been found. Now it has been re-edited ]
திங்கள், 3 மார்ச், 2025
சித்து சித்தர்
இப்போது சித்து என்பதையும் தொடர்புடைய சொற்களையும் கவனித்து ஆய்வோம்.
முனிவர்கள் பலர் பரத கண்டத்தில் வாழ்ந்துள்ளனர். விசுவாமித்திரர் போலும் முனிவர்கள் பேராற்றல் காட்டிப் பெரும்புகழ் படைத்தவர்கள். இவர்களை நாம் பெரிய முனிவர்கள் என்று சொல்வோமானால் பல்வேறு முனிவர்கள் அத்துணை ஆற்றல் போற்றல்களுக்கு இலக்காக இல்லாமல் சிறுசிறு நிகழ்வுகள் மூலமே தங்கள் இறைத்தொடர்பினை வெளிப்படுத்தியவர்களும் இருந்துள்ளனர். இவர்களைச் சித்தர்கள் என்று மக்கள் போற்றியுள்ளனர்.
இது பேரரசர், சிற்றரசர் என்று அரசர்களை வகைப்படுத்தியது போலவே யாகும். பெருமை சிறுமை என்று வகைப்படுத்தப்பட்ட இறையறிவர்கள் மட்டுமல்லர், மரங்களில் கூட இத்தகைய பாகுபாடுகள் நுழைந்துள்ளன. மா மரம் என்பது ஒரு மரத்தின் பெயரென்றால், அரச மரம் என்பது அரசுமுறையோடு ஒப்பிட்டு வைக்கப்பட்ட பெயராகும் என்பது அறிக. சித்தரத்தை அல்லது சிற்றரத்தை என்ற பெயரையும் காண்க. பெருங்காயம் என்று ஒரு காயப்பொருளுக்குப் பெயர் உள்ளமை நீங்கள் அறிந்தது. இப்படிப் பெயர் புனைவது பெருவழக்கு ஆகும்.
சிறு > சிற்றர் என்பது சித்தர் என்று திரிந்துவிட்டது காணலாம். சித்தர் அறிந்து சொன்ன வைத்தியம் சித்தவைத்தியம் ஆயிற்று. வைத்தியம் என்றால் வைத்து - கொஞ்சம் நீண்ட காலமாகத் தகுந்த சிகிச்சை யளித்துக் குணப்படுத்துவது என்று பொருளாயிற்று.
பார்த்து வியக்கத் தக்க சிறுசிறு வித்தைகளை இந்தச் சித்தர்கள் செய்தார்கள். கொடுத்த உணவினை வீட்டுக் கூரைமேல் எறிந்து "யானுமிட்ட தீ மூள்க மூள்கவே:" என்று சொல்ல, கூரை தீப்பற்றி எறிந்த வியப்புச்செயல் ஒரு வித்தை எனப்பட்டது.
வியத்தல்: விய > வியத்தை> ( இடைக்குறைந்து) வித்தை ஆனது. இது வியப்புக்குரியதைக் குறிக்கும். படிப்பு பற்றிய வித்தை, மற்றொன்று. அது வித்து என்னும் சொல்லினின்று பிறந்தது ஆகும்.
சித்தர் செய் விந்தைகள், சித்து எனப்பட்டது. இது சிறு > சிற்று> சித்து என்று அமைந்த சொல்.
சின்> சிந்து என்பது சிறிய அளவில் கொட்டும் நீர்குறிக்கும் சொல். மனத்துச் சிறிய எண்ணங்கள் சிந்தனை எனப்பட்டது. தொடர்சிந்தனையாக இல்லாம ல் நீண்டு செல்லாத மனவினையாகும்.
சித்தர், சித்து என்பதை இவ்வாறு அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
ம்
ஞாயிறு, 2 மார்ச், 2025
Being Yourself and Sivarathri photo
Yes just be yourselves at all times. This means also that you avoid external undue influences. That will lead to complete discovery of your own self.
[ On how to live life ]
Published in Facebook.
Also enjoy Mr Kumaran being upayatharar at Sivarathri temple festival.
சிவராத்திரியில் திரு குமரன் அவர்கள்.
CEO The Independent, web paper (Singapore).
சனி, 1 மார்ச், 2025
சிவராத்திரி பிரசாதம் வழங்குதல்
ஏறத்தாழ சுமார் ஐந்நூறு பேருக்குமேல் பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.