வந்தனம், வணக்கம் என்ற இரண்டு சொல்லையும் இன்று ஆய்வு செய்வோம்.
வந்தனம் என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்கள் வந் என்பது. வணக்கம் என்ற சொல்லின் வண என்பது உண்மையில் வண் என்ற அடியைக் கொண்டுள்ளது. இதை ஒலிமுறைப் படி அவிழ்ப்பதானால் வண் + அ+ கு + அம் என்று பிரிக்கவேண்டும். ஏன் வண் என்பது அடியாகிறது என்று கேளுங்கள். வண் என்பது வள் என்பதன் திரிபு. வள் என்பது உண்மையில் வளை என்ற சொல்லைப் பிறப்பித்த அடி. வளை என்றால் கோணிக்கொண்டு என்று பொருள். வணக்கம் என்பது என்னவென்றால் தன்னினும் பெரியவனாய் அல்லது தலைதாழ்த்தக்கூடிய மேன்மையுடைய ஒருவனின் முன் நாணிக்கோணி நின்று தன்பணிவைத் தெரிவிப்பதுதான். பழங்கால மனிதன் தன்னைப் பிறனுக்கு சிறியோனாய்க் கருதித்தான் வணங்கினான். யாவரும் சமம் என்ற கருத்து அப்போது எந்த மன்பதையிலும் ( சமுதாயத்திலும்) இன்னும் தோன்றவில்லை. மன்+ பது + ஐ > மன்பதை. அதாவது மனிதர் ஒருவருடன் பிறர் குறித்த எண்ணிக்கையினருடனாகப் பதிவுகொண்டு அல்லது உறவுகொண்டு ஒன்றுபட்டிருப்பது. பது, பதி, பதுங்கு, பொதி எல்லாம் உறவுற்ற சொற்கள்.
வந்தனம் என்ற சொல் எப்போது வணக்கம் என்ற சொல்லுடன் உறவு காட்டுகிறது என்றால் :
வந் > வந்தனம்,
வண் > வணக்கம் என்னும் போதுதான்.
வந், வண் உண்மையில் ஒன்று அல்லது தம்முள் உறவு உடையவை.
எப்படி முடியும். :இணக்கம்
அன்பு என்ற சொல்லில் உள்ள அன் என்பதும் அணுக்கம் என்ற சொல்லில் உள்ள அண் என்ற அடியும் எப்படி ஒன்றாம் ஈர்ப்பினைக் காட்டுகின்றனவோ அங்கனம் வண் என்பதும் வந் என்பதும் வளைவு காட்டுபவை. இரண்டும் ஓரின எழுத்துக்கள். ந, ண இரண்டும் இனம் ஒன்றியவை. இவை பெரிய வேறுபாடு உடையவை அல்ல.
இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல், வந்தனம் என்பது வளைந்தனம் என்பது தான் அன்றி வேறில்லை. வண் என்பதும் அது. இன்னும் விளக்கமாய்ப் பின் எழுதுவோம். வளைந்தனம் > (இதில் ளை குறுக்கினால்) வந்தனம் ஆகிவிடுகிறது. எவரும் சொல்லாத ஒன்றைக் கண்டு சொல்லும் போது அது ஆய்வு என்பதை விடக் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்லவேண்டும்..
இவ்வாறு இவை உறவுச்சொற்கள். சமஸ்கிருதம் என்பது தமிழின் அக்காள் தங்கை உறவுள்ள மொழி என்பதுதான் உண்மை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்,
Copyright for this post is waived.
You may share this through any social media.
[ This post had been attacked and errors had been found. Now it has been re-edited ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக