செவ்வாய், 18 மார்ச், 2025

புதிய காட்சியுரை: நாகரிகம் என்ற சொல்.

 இன்று       நாகரிகம் என்ற சொல்லை ஆய்வு செவோம்.  அதனுடன்  "நாகரீகம்" என்ற சொல்லையும்  சேர்த்துக்கொள்வோம்.  இதில் ஓர் எழுத்து  ( ரீ ) நெடிலாக வருகிறது.  இரண்டு வடிவங்களும் அகரவரிசைகளில் காணப்படுதலால் ஒன்று சரி மற்றது பிழை என்னாமல் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பொருளுரைக்க முடியுமா என்று பார்ப்போம்.\

முன்னர் ஒரு காலத்தில் நாகரிகம் என்பது என்ன சொல் ( தமிழா அல்லது சமஸ்கிருதமா )  என்று தெரியதநிலை இருந்தது.  மேலும் தமிழ் நூல்களில் நாகரிகம் என்று சிலவற்றிலும்  நாகரீகம் என்று சிலவற்றிலும் இந்தச் சொல் பயின்று வழங்கியது. இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே பொருள் கூறப்பட்டமையின், இரண்டில் ஒன்ரு வழு என்றும் தமிழாசிரியர்கள் எண்ணினர்/  அதனால் நாகரீகம் என்பது "வழூஉச்சொல்" என்ற  கருத்தும் நிலவியது. இதுதான் முன்னைய நிலைமை .

தமிழ்ப்  பேரகராதி வெளியிட்ட  சென்னைப் பலகலைக்கழக புலவர்கள் இரு வடிவங்களிலும் இந்த நாகரிகச் சொல்லைக் கண்டு பதிவிட்டிருந்தனர். பேரகராதிக்கு முன்வந்த அகரவரிசைகளில் இரு வடிவங்களும் காணப்பட்டன.
இது நகர் என்ற சொல்லினின்று வந்ததாகவே தேவநேயப் பாவாணர் சொல்கிறார்.  என்றாலும் இது  நாகர் என்ற சொல்லினின்றும் வந்ததாகவுமே சொல்லப்படுவதுண்டு.  நாகர் மிக்க நாகரிகம் அடைந்திருந்தனர் ( அதாவது நகரவாசிகளாக  இருந்தனர்) என்றும் விளக்கினர்.

இதை இங்கு வேறு கண்டுபிடிப்புகளுடன் நாம் கூறுகிறோம்.

நாகரிகம் என்ற சொல்லின் பகவுகளைக் காண்போம.

இதை நகுதல் என்ற சொல்லினின்று  தொடர்கிறோம்.  நகுதல் என்றால் ஒளிசெய்தல்.  நகு என்பது நாகு என்று மாறுகிறது.  இதில் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  நக்கத்திரம் > நட்சத்திரம் என்ற சொல்லும் நகுதல் என்ற சொல்லினின்றே வந்ததாக புறநானூற்றுச் சொற்பொழிவுகள் செய்த பேராசிரியர்கச் ஒப்புக்கொண்டனர்.
 
1952;  புறநானூற்றுச் சொற்பொழிவுகள். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, காண்க.

அடுத்தசொல் அரு ( அருமை) என்ற சொல்லாகும்..  \இரண்டும் சேர்த்து நாகரு என்று ஆகும்.

இகம் என்பது ஒரு விகுதி.  இதற்குச் சொல் என்ற அளவில்  இகுத்தல் என்பதிலிருந்து வந்தது என்பதே சரி.  இகுத்தல் என்ற கொடுத்தல் அல்லது ஈதல்.  ஆகவே கொடுப்பது என்பது பொருளாகிறது.  இதற்குப் பல பொருண்மைகள் கூறப்படுவதால் வேறு சொற்களில் விகுதிக்கு வேறு பொருள் வரக்கூடும்.  விகுதிகள் பொருள் இல்லாமல் வேறு சொல்லமைப்புக்கு உதவுதாகவும் இருத்தல் உள்ளது.

நாகரு+ இகம் >  நாகரிகம் ஆகிறது\\

நாகரீகமென்பது பாடல்களில் இசைமுறிவு ஏற்பாடாமல் இருக்க  நீட்டுதல் என்று முடிக்கவேண்டும்.  அதற்கு வேறு பொருளில்லை. பொருள் இதுவேதான் என்று உணர்க.

விண்ணானம் என்பது நாகரிகத்துக்கு இன்னொரு சொல். இதில் விண் ( ஆகாயம்) என்னும் பொருள் உள்ளசொல் நாகரிகத்துக்கு ஈடான சொல்லாகக் கொள்ளப்பட்டிருப்பதால் ஒளி குறிக்கும் ஒரு சொல் நாகரிகத்துக்கு ஆளப்பட்டிருப்பதும்  ஏற்புடையதே என்று உணர்க.

நாகரிகமென்ற சொல்,  திருக்குறளில் உள்ளது:  குறள் வருமாறு:

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம்  வேண்டு   பவர் 

என்பது குறள். இது  இலக்கிய வழக்கு உள்ள சொல் என்பதும் அறிக.  இது ஒரு பல்பிறப்பி என்றும் உணர்க

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.
"அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்" நாளை வெளிவரும். படிக்கத் தவறாதீர்.



கருத்துகள் இல்லை: