எல்லா விவரங்களையும் உள்ளடக்கி எடுத்து வைத்துக்கொள்ளுதல் என்று இதற்குப் பொருள் சொல்லலாம். ஸ்கேன்னிங் என்பதற்குப் பதினாங்காம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு பொருட்சாயல்கள் ஏற்பட்டுப் பயன்பாடு கண்டுள்ளன என்பது ஐரோப்பிய அறிஞர்கள் கூறுமுகத்தான் தெரியவருகின்றது.
ஓர் இயந்திரத்தில் நாம் கொண்டுபோய் ஏற்றும் தாளிலிருந்து எடுத்துக்கொள்ளுதல் என்பது நாம் செயல் முறையில் கண்டுகொள்ளும் பொருளாகும்.
இதற்குத் தமிழில் உறுவித்தல் என்ற சொல்வது மிக்கப் பொருத்தமாகும். உறுதல் என்ற சொல் நெடுங்காலமாக வழக்கில் இருந்த சொல். ஒன்றில் மற்றொன்று படுதல், அல்லது தொட்டுத்தொடர்பு கொள்ளுதல் என்பது இதன் பொருள்.
இது என்னவென்றால் தொடர்பு படுத்தி மேலேற்றுதல். ஒரு இயந்திரம் தாளைத் தொட்டவுடன் தாளிலுள்ளது இயந்திரத்துக்குள் ஏறிக்கொள்கிறது. இயந்திரம் அதைப் பதிந்து இங்கோ வேறிடத்திலோ வேண்டியபடி கொண்டுதருகிறது.
உறுதல் தன்வினை உறுவித்தல் பிறவினை. உறுவித்தல் என்பதன் மூலம் இதே கருத்து நமக்குக் கிட்டுகின்றது.
வி என்ற விகுதியை இணைப்பதன் மூலம் நாம் தமிழில் இதை எளிதாகச் செய்துவிடலாம்
FURTHER READING:
If you have the time, you may wish to read this as well:
https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_19.html
மேற்கண்ட இடுகை மகத்தான என்ற சொல்லை விளக்குகிறது. கோடிட்ட பகுதியைச் சொடுக்கி வாசிக்கவும். Click the underlined entry above and it will take you to the post.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக