அசோகப் பேரரசனின் கல்வெட்டுக்களில் அதியமான் என்னும் தமிழரசனின் பெயர் திரிந்து காணப்பெறுகிறது. அயல் நிலங்களைச் சென்று சேர்ந்த சொற்கள் பல திரிந்துவழங்குதல் என்பது மொழிகளின் இயல்பு ஆகும். திரிதல் ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்ல்லை. போலிச்சொற்கள் விதிப்படியே திரிந்துள்ளன என்பதே இன்று இங்கு நம் கவனத்துக்குரிய தாகியுள்ளது.
அதியமான் என்னும் சொல் சதியபுத என்று அறியப்பட்டுள்ளது. அதிய என்பதே சதிய என்பது திரிபு.இது அகர சகரத் திரிபு, இது இலக்கணத்துடன் ஏற்புடைய திரிபே ஆகும். மான் என்பது எப்படி புத ஆனது? மான் என்பது உண்மையில் மகன் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே. மகன் மான் இரண்டும் தமிழே. மகன் என்றால் புதல்வன் ஆதலால் அசோகப் பேரரசின் கல்விமான்கள் புத என்ற சொல்லின்மூலம் அவனைக் குறித்துள்ளனர்.
புத என்பது புதல்வன் என்பதிற் பாதிதான். வடதேசத்து மொழிகளில் அன் விகுதி இல்லை. ஆகவேதான் புது அல் வு அன் என்ற சொற்பகவுகளில் புது அல்> புத என்று சொல் நின்றுவிட்டது. புதல்வு, புதல் என்பன அசோகன் ஆட்சியின் மொழிவடிவங்கட்கு ஏலாதவை.
இந்தோ ஆரிய மொழிகள் என்று கூறப்பட்டாலும் அன் தவிர்த்த புதல்வு என்பது "சோல்வ்" என்ற ஆங்கிலச்சொல் போல் ஒலி ஏற்கப்படவில்லை என்பது தெளிவு,
புத என்பது அக் காலத்திய மொழியின் சொல்வடிவங்கட்கு ஏற்புடையதாய் இருந்துள்ளது எனற்பாலதையே இது திறம்படக் காட்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
உங்கள் அன்பான கவனத்திற்கு
FOR YOUR KIND ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக