இரவொன்று வாராமல் பகலே வந்த
இன்பநாளைத் தருகின்ற வலிமை ஒன்றைத்,
தரவேண்டும் என்றெண்ணும் பகலோன் தானும்.
தகவளந்து தருதற்கோ இயல்வ தில்லை!
பரவோங்கும் வான்போற்றும் புவியின் மீதும்
பரந்துவாழும் மக்களிடை நிலவும் சூழல்,
குறைவாழ்ந்த திலையென்று நினைத்திட் டாலும்
குறைவிகுந்து தலைசாய்ந்தார் பலரே ஆமே.
\
உலகில் சில நடப்புகள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை. அதற்காக உடனே உயிரை மாய்த்துக்கொள்வது பரிதாபத்துக்குரியது ஆகும். இன்று காலையில் வந்த மணிலாச் செய்தியில் 24 வயதுடைய ஒரு தென் கொரிய சிறந்த நடிகை இறந்துவிட்டாள் என்று தெரிகிறது. ஏதோ ஒன்று நிறைவேறாமல் போனதாக இருக்கலாம். பாவம் இவள். இதுபோன்று உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர். இரங்கத் தக்க இதுபோல்வோருக்கு இப்பாடல் எழுதப்பட்டது.
பொருள்:
தகவளந்து - தகுதியை அளந்து அறிந்து
பரவு ஓங்கும் - மிகுந்த பரப்புடைய
குறைவு இகுந்து - ஒரு குறைவினால் நிலை அழிந்து
குறைவு ஆழ்ந்த - குறைகள் பலவுடைய
இலை என்று - இல்லை என்று
தலைசாய்ந்தார் - தற்கொலைக்கு ஆட்பட்டார் ( இடக்கரடக்கல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக