முன் எழுதிய கவிதையின் https://sivamaalaa.blogspot.com/2024/08/blog-post_68.html
இன்னல் இடுக்கண் இருள்மாற்றி இவ்வுலகு
கன்னல் அமுதாக்கு காண்உலகு நட்புமுனி
மோடி நெடுவாழ்வே ஆடிவரு நல்விளக்கு
தேடுலகில் தீங்ககலக் காண்.
இது இன்னிசை வெண்பா
இதன் பொருள்:
உரை: இவ்வுலகின் நட்பு முனிவர் அல்லது விசுவா மித்திரர் என்று ஒருவர் உள்ளார் என்றால் அவர் மோடிஜி அவர்களே. இன்னல், இடுக்கண், இருள் என்னும் அறியாமை ஆகியவைகளை அவர் நீக்குகிறார். . அவர் கரும்பு போல் இனிய அமுதினைத் தருகின்றார். எப்படி? பரத கண்டத்துக்கு நல்ல ஆட்சியைத் தந்துகொண்டு நன்மைகளை உலகுக்கும் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய நெடுவாழ்வு உலகுக்கு ஒரு நல் விளக்கு ஆகும். இந்நாளில் உலகின் தீங்குகள் நீங்கிவிடக் காண்க.
காண் உலகு என்பது வினைத்தொகை. உலகுநட்புமுனி என்றால் விசுவாமித்திரர். காண் என்பது உலகுநட்புமுனி என்ற முழுத்தொடரையும் தழுவிநிற்கக் காண்க. மோடி என்று பெயர் அடுத்து வந்து யார் அவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது. அடுத்த தொடருக்கும் மோடி என்ற சொல்லே நடுநாயகமாக நிற்கிறது. This is the fulcrum tactic. Try it in your own constructions.
இது இவ்வெண்பாவின் பொருள்.
[முன்வரும் தொடர்] (நடுநாயகம்)[பின்வரும் தொடர்]
முதலடி முற்றுமோனை ஆகிறது.
கடைசிக்கு முன் இரண்டடிகள் எதுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஈற்றடி மோனையுடன் வருகிறது.
இன்னல்- துன்பங்கள்
இடுக்கண் - இடைஞ்சல்கள்
இருள் - அறியாமை.
கன்னல் - கரும்பு
அமுது - இன்னுணவு
உலகு நட்பு முனி - விசுவாமித்திரர்
ஆடிவரு நல்விளக்கு - போகுமிடம் வந்து ஒளிகாட்டும் விளக்கு
மோடி நெடுவாழ்வு = அவர் நீடுவாழ்க என்பதாகும்.
தேடுலகு - மாற்றம் தேடும் உலகம்
தீங்ககலக் காண் - தீங்குகள் மறைந்துவிடும் காண்பீர்
அமைதி முய₹சிகள்வெற்றி பெற்று உயர்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக