இச்சொல்லை ஆய்தல் செய்வோம்
நீ என்பது நீ என்றே தமிழிலுள்ளதுபோல் பொருள்கொள்க.
ஆசு என்பது தொடர்பு அல்லது பற்றுக்கோடு.
அம் என்பது அமைப்பு குறிக்கும் விகுதி.
ஆகவே நியாசம் என்பது உன்னை இறைவனுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் நிலை.
ஆசு அல்லது பற்றுக்கோடு என்பது பற்றிக்கொள்ளுதல் அல்லது இங்கு உணர்ந்து அறிதலாகும். இது ஆகுதல் அல்லது ஆதல் என்னும் சொல்லிலிருந்து வருகிறது. ஆ என்பதே வினைச்சொல்.. ஆகு என்பதில் கு என்பது சேர்வு குறிக்கும் வினையாக்க விகுதி. மூழ்கு என்பதில் மூழ் என்பது வினையன்று. கு எனற்பாலதை இணைத்தாலே வினை உருவாகும். (மூழ்கு). ஆனால் ஆ என்பதே வினையாகவிருப்பதால் ஆகு என்று கு வினையாக்கம் வந்தாலும் இல்லாவிட்டாலும் ஆ என்பதே வினையே ஆகும். ஆ> ஆனான் இறந்தகால வினைமுற்று.
ஆகவே நியாசம் Nyāsa என்பது தமிழ்மூலங்களை உடைய சொல்.
நியாசத்தின் தன்மையை பிருந்தாரண்யகத்து உபநிடபத்தில் அறிக. ( பிரிந்த ஆரண்யகத்து உபநிடதம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக