தயாளம் என்ற சொல்லைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.
இதில் இரண்டு துண்டுகள் உள்ளன. தயை என்பதொன்று. ஆளம் என்பது இன்னொன்று. ஆளம் என்பது ஆளின் தன்மை என்று பொருள்படும்.
தயை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க:
https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_7.html
தயை என்பதை ஆளம் என்ற ஈற்றுடன் புணர்க்குங்காலை, தயை என்பதன் இறுதி ஐ விகுதி கெடும் ( அதாவது அவ்விகுதி களைந்துவிடுதல் வேண்டும்). ஆகவே தய + ஆளம் என்பவை சேரும்.
வன்மை பொருந்திய செயல்களைத் தவிர்த்து இரக்கம் காட்டுவதே தயாளம்.
தயாளம் என்று புணர்ந்து விளைதலின், இதுபோன்ற சந்திகள் தமிழில் உளவா என்று அறிதல் வேண்டும். உள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு:
மர + அடி = மராடி என்பது காண்க. இஃது வகர உடம்படுமெய் இல்லாத புணர்ச்சி ஆகும். உடம்படு மெய் வரின், மர+ அடி > மரவடி என்று வரும். அல்லது அத்துச் சாரியை பெற்று, மரம் + அத்து + அடி = மரத்தடி எனவாகும்.
அத்து என்னும் சாரியை உண்மையில் அது என்னும் சுட்டுப்பெயரில் தோன்றிய இரட்டிப்புச் சொல் தான். அது > அத்து. ( தகர இரட்டிப்பு). த் + த் + உ > த்து ஆகும். "அது" இதற்கு மூலம் என்பதைக் கூறுவதில்லை.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக