இன்று இன்னொரு தமிழ்ச்சொல்லை நாம் கவனித்தறிவோம்.
பண்டை நாட்களில் போர்க்களத்தில் கொடிகள் பல்வேறு வேலைகளுக்குப் பயன்பட்டன. அவற்றுள் ஒன்று அழைப்பறிவித்தல் என்று சுருங்கச் சொல்லலாம்.
அதாவது ஒருவன் தன் கூட்டத்தார் சற்று எட்ட (சேய்மையில்) நின்றால் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அருகில் வருமாறு அழைப்பதற்கும் கொடியசைப்புகளைப் பயன்படுத்தினான். தன் கூட்டத்தார் சூழ நின்ற போது இவன் பெரும்பாலும் ஒரு நடுவிடத்தில் நின்றுகொண்டே தன் கொடியை அசைத்தான். எல்லோரையும் சமதூரத்திலிருந்து அருகில் வரச்செய்வதற்கு ஒரு நடுவிடமே சாலச் சிறந்தது ஆகும். ஒலி எழுப்புவதற்கும் அத்துடன் கொடி அசைப்பதற்கும் ஏற்புடையதுமாகும்.
அழைத்தலுக்கு இன்னொருவழிச் சொலவு " கேதல்" " கேதுதல்" என்பனவாகும். கேள், கேட்டல் என்பனவும் இவற்றுடன் தொடர்புடைய சொற்கள் என்பது விளக்காமலே தெளிவுறும். இது நடுவிடத்திலிருந்தே பெரிதும் நடைபெற்றதால் கே > கேந்திறம் > கேந்திரம் என்ற சொல் உருவாயிற்று. இது பெரும்பாலும் படையணியினர் அல்லது கள்ளர்குழுவினர் அமைத்த சொல் ஆகும். கேள்திற நடுவிடமே கேந்திரம் ஆயிற்று. இதுவுமது: கேள்திறம் > கேத்திரம், இது மெலிந்து கேந்திரம் ஆகுமென்று கூறினும் வேறுபாடில்லை என்பதறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக