இப்போது நாம் ஒரு அடிச்சொல்லுடன் முரண்பட்ட ஓர் சொல்லமைப்பை அறிந்துகொள்வோம்.
நலம் என்ற சொல்லின் அடி "நல்:" என்பதுதான். நல் என்றாலே கெடுதல் ஒன்றுமில்லாதது என்பதுதான் நாமறிந்த, தமிழுலகறிந்த பொருளாகும்.
நல் + அம் = நலம் என்பதே சரியான புனைவு. நலி + அம் = நலம் என்று வந்தது என்று தமிழாசிரியர் கூறார்
ஆதியில்---- - அதாவது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றித் தமிழ் உருவெடுத்த நிலையில் ----- அ, இ, உ என்ற முச்சுட்டுகளே மொழியில் சொற்களாகப் புழங்கக் கிடைத்த நிலையில் ----- மனிதன் அவனுக்குத் தோன்றிய கருத்துக்களை அடுத்து நின்றவனிடம் தெரிவிப்பதற்கு , இங்கே என்று குறிப்பதற்கு அவனிடம் இ மட்டுமே இருந்தது. இங்கே என்று சொல்ல " இ " என்று குறித்தாய் ! அப்புறம் இல்லை என்பதற்கு இன்னொரு சொல் வேண்டுமே, என்ன செய்வாய்? இந்த மாறாட்ட நிலையை தமிழால் விளக்க முடியும். சுட்டுக் கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் காணலாம். ஆங்கிலம் என்ற எங்கிலோ செக்ஸன் மொழியில் கூடக் காணலாம். "ஹி" என்பதில் வரும் ஹ் என்பதை எடுத்துவிட்டுப் பார்த்தால் இ என்பது இருக்கிறது. சுட்டு ஒளிந்துகொண்டு இருக்கிறது. திருடனைக் காவலன் பிடிப்பதுபோல் பிடித்துக்கொள்ளுங்கள். மலாய் என்ற Austronesian (Malayo-Polynesian) மொழியில் பார்த்தால் கூட, டி-ஸீனி என்பதில் ஸி - இ இருக்கிறது. ஸானா என்பதில் ஆ( அ - ஆ - அங்கே) என்ற சுட்டு உள்ளது. ஆனால் வேறு ஒலிகளுடன் கலந்து உள்ளமைக்குக் காரணம் அது தோற்றகாலத் தாயினின்று வெகு காலத்தொலைவு பயணித்து வந்துவிட்டதுதான்.
மாறாட்ட நிலையென்று மேல் குறித்த நிலைக்குத் திரும்புவோம். இல்லை என்று குறிப்பதற்கும் "இ" என்றுதான் குறிக்கவேண்டும். இதைப் போலவே, இல் ( இருக்கிறது என்று குறிக்க ) என்பதும் இல் ( இல்லை என்று குறிக்க) என்பதும் ஒரு சொல்லே ( அல்லது ஒரொலிச் சொற்களே ) இருபொருளையும் தெரிவிக்கிறது. இல் என்பது இன்று இடப்பொருள் குறித்தாலும் அதன் பண்டைப் பொருள் இருக்கிறது என்பதுதான். இரு என்ற சொல்லே இல் என்ற அடியிலிருந்து வந்ததுதான். இல் > இரு ஆகும். இதேபோல புல் > புரு ஆகும். மல்> மரு ஆகும்.( புருடன் என்ற சொல்லுக்கு யாமெழுதிய விளக்கத்தை முன் வந்த இடுகையில் காண்க ).
இலத்தீன்( maxim சட்டமுதுமொழி ) வாக்கியம் Ubi jus, ibi remedium என்பதில் இபி - என்ற சொல்லில் இகரச் சுட்டு கலந்துள்ளது. hic என்பதிலும் உளது. இவற்றைப் பிரித்துணர வேண்டும். உள்ளது குறிக்கும் உ மற்றும் இ என்ற சீனமொழிச் சொல்லும் இதை விளக்கவல்லது. இ மாய் - இவளுக்கு வேண்டாம் என்பதிலும் காண்க.
சிலவிடத்து ஓரொலிச் சொல் (ஒலியொருமைச் சொல்) மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்க இயல்வதுண்டு. ஒரு கதையில் இதை விளக்கலாம். ஆனால் அதை இன்னொரு நாள் பார்க்கலாம்.
நல்-நலி என்றவற்றில் உண்டான அடிச்சொல் எதிர்மறையை வேறு வகையிலும் விளக்கலாம். நலி என்பதில் வரும் ஈற்று இகரம் , இல்லை என்பதன் கடைக்குறை எனலாம். அப்படிச் சொல்வதற்கும் இடம் இல்லாமல் இல்லை.
இவ்வாய்வை இடுகை இன்னொன்றில் காண்போம்.
அறிக மகிழ்க
மெய்ப்புபின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக