போய்விட்டாய் என்றன்றோ நினைத்தி ருந்தோம்
போனதிசை கண்ணிற்குள், அதன்முன் வந்தாய்!
ஆய்விட்ட வேலைசில, இனியும் உண்டோ?
அவைமுடித்துப் போவதற்கே இவண்நீ வந்தாய்!
நோய்கொட்டிக் கொல்லுறுத்தும் கொர னாப் பேய்நீ
நூதனமாய் இனிஎன்நீ செயப்போ கின்றாய்
வாய்கட்டி வழிச்செல்லும் வழக்கம் மாற்றி
வாழ்நாளும் விடிகாலம் வருமெந் நாளோ?
பொருள்
இனிஎன்நீ - இனி என்ன நீ
இவண் - இங்கு
கொல்லுறுத்தும் - சாவுகளைக் கூட்டும்
வாய்கட்டி - முகக் கவசம் இட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக