வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஒருமை பன்மைக்குள் வந்தது.

ஒரு என்ற எண்ணுப் பெயரினுக்கு  ஒல் எனற்பாலதே  அடிச்சொல் ஆகும்.

ஒல் > ஒர் > ஒரு என்பனவே அடியினின்று வந்த உருவாக்க
 ஓட்டம். ஒல்+  து என்பதே ஒன்று என்று விளைந்தது. ஒன்று என்பதில் ஈற்றில் நின்ற துகரமே ஒருமை உணர்த்தும் விகுதியாகும்.  இதில் எழும் வினா என்னவென்றால்  ஒல் அல்லது ஒன் என்பதே பொருண்மையால் ஒருமையாக, இன்னும் ஓர் ஒருமை காட்டும்  விகுதி எதற்கு  என்பது தான்.

ஒன்று இரண்டு என்பவற்றை அப்போதுதான் உருவாக்கி அல்லது உணரத்  தலைப் பட்டிருந்த அந்த உதய காலத்தில் ஏன் இந்த ஒருமை பன்மை என்ற கருத்தமைப்பினைச் சொல்லமைப்பில் புகுத்தும் போராட்டத்தில் மொழியாக்க முனைப்பினர் ஈடுபட்டனர்     என்பதை அறிந்து கொள்ளும் வழி ஒன்றும் இல்லை. து என்பது அஃறிணை ஒருமை விகுதி என்பதனை எப்போது  வகுத்தனர்
என்பதும் அறியக்கூடியதாய் இல்லை.

இவ்வாறிருக்க இரண்டு  என்பது பொருளிற் பன்மையாய் நிலவ, ஏன் அதனுள் அஃறிணை ஒருமை விகுதி புகுத்தினர் என்பதும் புதிரே ஆகும். இவ்வாறே  மூன்று  (மூல்+து) ,  ஐந்து (ஐ+து ) ,  எட்டு ( எள்+ து),  ஒன்பது ( ஒன்று கழி த் த  பத் து) இன்னும் தொண்டு என்பவற்றிலும் ஏன் அஃறிணை ஒருமைத் து விகுதி ஏற்றினர் என்பதும் கேள்வியாகும்.

நீர் மொழிகளை ஒருவாறு அறிந்தவர்  எனின் உலகில் சில மொழிகளில் ஒருமை பன்மை இல்லை என்பதை அறிந்திருப்பீர்.  இதற்கும் ஒரு வினாவை எழுப்பாமல் விடுப்போம்.  சில மொழிகளில் ஒருமை பன்மை பொருளுக்கு இல்லை.  சொல்லுக்கே உண்டு.  சிலவற்றுக்கு ஒருமை இருமை பன்மை என்று மூவிதம் கண்டுள்ளனர். அதனால் கூடுதல் சாதனை யாதென்பீர்?
மும்மை நான்மை ஐம்மைக்கும் போயிருப்பர். களைப்பினால் ஒதுங்கிவிட் டனர். உலகுக்கு நன்மையே.

தமிழில் வல்லுநர் என்பார்  இதை அறிந் து உலகுக்கு விளக்குபவராகவும் இருக்க வேண்டுமே.  நீரே ஆய்வீர்.

அறிவோம் மகிழ்வோம்.

தட்டச்சுப் பதிவு பின்னர் சரி பார்க்கப் படும்.

கருத்துகள் இல்லை: