வியாழன், 28 நவம்பர், 2019

ரோகியுடன் சில சொற்கள்

இன்று "ரோகி" என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

மனிதன் "உறுகின்ற"வற்றுள் முதன்மையாக வெறுத்து ஒதுக்கற்குரியது நோய் என்று சொல்லலாம். இதற்குக் காரணம் நோய் என்பது முற்றினால் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றுவிடும்.  அப்புறம் அம்மனிதன் உலகின்கண் இலனாகி விடுவதால் நோய் அஞ்சத்தக்கது. நல்லவேளையாக நோய் நீங்கி வாழ மனிதன் பல்வேறு சிகிச்சைகளைக் கண்டுபிடித்துள்ளான். சிகிச்சையாவது சீர்படுத்திக்கொள்ளுதல்.   சீர்ச்சை > சிகிச்சை.  சீர்ச்சை சிகிச்சை என்பவெல்லாம்  "சீர் செய்" என்பதன் திரிபுகளே.   ஆதலின் இவை திரிசொற்கள்.

செய் என்பது சை எனத் திரியும்.  எடுத்துக்காட்டுகள்:

செய்கை >  சைகை.
பூ செய் > பூசை.  (>பூஜை).
நன்செய் >  நஞ்சை
புன்செய் >  புஞ்சை
தண்செய் > தஞ்சை  (ஊர்ப்பெயர்).

சீர் என்ற சொல்லும் சொல்லிறுதியில் சி என்று குறுகிவிடும்.

வன்சீர் >  வஞ்சி.  (வஞ்சிப்பா )

இனி நோய் என்னும் ரோகத்தையும் நோயுடையோனாம் ரோகியையும் சந்திப்போம்.

கெடுதல் குறிக்கும் ஊறு என்ற சொல்லும் உறு என்ற வினை முதனிலை திரிந்தமைந்ததாகும்.  முதனிலை நீண்டுள்ளது.  படு > பாடு எனற்பாலதுபோல் உறு > ஊறு ஆயிற்று.

உறுவது ஓங்குவதே ரோகம்.

உறு ஓங்கு அம் >  உறு ஓகு அம் >  உறோகம்.
இச்சொல் தலையிழந்து  றோகம் > ரோகம் ஆயிற்று.

ரோகமுடையான்  ரோகி.

ரோகம் ரோகி என்பவெல்லாம் திரிபுகள்.

ஒருவேளையே உண்பான்  யோகி;
இருவேளை உண்பான்  போகி;
மூன்றுவேளையும் முடிப்பவன் ரோகி.

இவ்வரிகளில் ரோகி என்ற சொல் இலங்குவதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


குறிப்புகள்

இலக்கணம்

ஓங்கு >  ஓகு  (  இடைக்குறை).
ஓகு > ஓகம்.

சீர்ச்சை  >  சிகிச்சை.    பகு என்பது பா என்று திரிந்தன்ன சீ(ர்) என்பது சிகு> சிகி ஆனது.  இது மறுதலைத் திரிபு  மற்றும் உகர இகரத் திரிபு.

இவை போல்வன எம் பழைய இடுகைகளிற் கண்ணுறுக.

ஓகம் என்பதே பின் யோகமும் ஆனது.  பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர்.  சூழ்ந்து திறமாக அமைவுற்றது சூத்திரம்.  (சூழ்த்திறம்  > சூத்திரம்,  இது வாழ்த்தியம் > வாத்தியம் போலும் திரிபு ஆகும்.)

தட்டச்சுப் பிழைத்திருத்தம் பின்.

சனி, 23 நவம்பர், 2019

யாதவர்

வகரமும் மகரமும் தொடர்புடை ஒலிகள்.  ஒன்று  மற்றொன்றாக மொழியில் திரிந்து வரும். இப்படித் தொடர்புபட்டு வரும் சில கிளவிகளைக் கண்டு போல வருதலின் போலி என்றனர் தமிழிலக்கணத்தார்.  இலக்கண நூல்களில் இவ்வாறு தெரிவித்த இவ்வாசிரியர் மிக்க நுண்ணறிவுடையோர் என்று நாம் அவர்களைப் புகழலாம். அவர்கள் அதைச் சொல்லாமல் நீரே இதைக் கண்டு உணர்ந்திருந்தால் உம் நுண்ணறிவினுக்காக நீரே உம் முதுகில் நாலு தடவை தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

செய்யுள் இயற்றும்போது முதலில் வகரத்தில் தொடங்கிய ஒரு வரிக்கு அடுத்த வரியிலும் வகரத்தில் தொடங்க ஒரு சொல் கிட்டவில்லையென்றால்
(  மோனை )  மகரத்தில் தொடங்கிக்கொள்ளலாம்.  மோனை கிட்டிவிட்டதென்று தட்டிக்கொள்ளலாம் உம் கைகளை.

பொருள் மாறாமல் எழுத்துமட்டும் மாறியிருந்தால் ஆனந்தம் தான். எடுத்துக்காட்டு:   மிஞ்சுதல்  > விஞ்சுதல்.  பொருள் அதே.

சில வேளைகளில் எழுத்தும் மாறிப் பொருளும் சற்று மாறியிருக்கும். உதாரணம்:

மிகுதி  > விகுதி.

விகுதி என்பது சொல்லில் இறுதியாக மிகுந்து நிற்பது.

தணி > தணிக்கை.  இங்கு கை என்பது தனிப்பொருள் ஏதுமின்றிச் சொல்லை மிகுத்து  வேறு பொருளை வருவித்தமை காண்க.

இது நல்ல உது+ஆர்+ அண் +அம்.  ( நிறைவாக அண்மி முன் நிற்கும் ஒரு சொல் ). உது - முன் நிற்பது.  ஆர்(தல்) : நிறை(தல்). அண் : அண்மியது.  அம்: விகுதி.

சரி. இனி யாதவர் என்ற சொல்லைக் கவனிப்போம்.

ஆகரத்தில் தொடங்கிய சில சொற்கள் யாகாரத்திலும் தொடங்கிடலாம்.

ஆனை > யானை.
ஆடு > யாடு.
ஆதல் >  யாத்தல். ( மாறித் தொடங்கியது மட்டுமின்றி தகர ஒற்றும் தோன்றிற்று ). யாத்தல் எனின் தானே ஆகுவதன்றி ஆக்கப்படுவதாகும். புலவன் பாவினை ஆக்குகின்றான்.  அவனே ஆக்கியோன்.
ஆக்குதல் > யாக்குதல்
ஆண்டு > யாண்டு
ஆறு > யாறு.
ஆமை > யாமை.
ஆய் > யாய்

யாதவர் என்ற சொல்லில் முன் நிற்பது உண்மையில்   "ஆ" தான்.   ஆ என்றால் மாடு.  ஆ என்பதே யா ஆகி நின்று உம்மை மயக்குகிறது.

தவர் என்பது தமர் ஆகும்.  மேலே வகரம்<> மகரம் பரிமாற்றம் கூறினோம்.  அதை மீண்டும் பார்த்து மனப்பாடமாக்கிக் கொள்க.

மொழி இடை வரு இத்தகு பரிமாற்றத்திற்கு இன்னொரு காட்டு:

அம்மையார் >  அவ்வையார்  ( மகரம் வகரமாகிப் பரிணமித்தது.)

*ஆகவே  தமரே தவர்.   தமர் எனின் தம்மவர்.

ஆக்களை மேய்க்கும் தம் பெருமக்களே யா+தமர் >  யா+தவர்.

தவர் என்பதைத் தவமுடையார் என்று விளக்கினும் ஒக்கும்.

வட இந்திய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் அன், அர் . அள் முதலிய ஒழிந்து வழங்கும். அவ்வதே நிகழும் ஈண்டுமென்றுணர்க.

தமிழ் மொழி இயன்மொழி ஆயினும் பற்பல - எண்ணிறந்த திரிபு வசதிகளைத் தன்னகத்தே இயக்கிக்கொண்டு உலக மொழிகளையும் வளப்படுத்தியுள்ளமை உணர்க.


அறிவீர்  மகிழ்வீர்.

திருத்தம்
7.12.2019 ஓர் எழுத்துப்பிழை  * (அ - ஆ) திருத்தம் செய்யப்பட்டது.

வெள்ளி, 22 நவம்பர், 2019

கடற்பரப்புக் குறிக்கும் சொற்களும் பிறவும்.

பரவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடல் என்று பொருள். கடல் மிகப் பரந்தது (பரப்பு உடையது ) என்று     நம் முன்னோர்கள் 6எண்ணியதால் இச்சொல் மொழியில் எழுந்தது.  இதேபோல் கடவுளும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவி நிற்பதாக உணரப்படுபவர் என்னும் கருத்தினால்  அவர்க்குப்  '"பரம்பொருள்"   என்ற பெயர் ஏற்பட்டது. இதன் முதலாகிய பரம் என்பதும்  "பரன்" என்று மாறி அக்கடவுளுக்கு ஆண்பாற் பெயரானது.  இன்னும் பரம் என்பதே  அன் விகுதி பெற்று  பரம்+ அன் = பரமன் என்று அக்கடவுளையே குறித்தது.

மனிதர் உள்ளிட்ட மரம் செடி கொடி விலங்குகள் என எவற்றின்பாலும் அன்பும் அருளும் உடையவனாகிப் பரந்த நோக்குடன் வாழ்ந்தவன் :  பர >  பார் > பாரி எனப்பட்டான். ( முல்லைக்குத்   தேர்   கொடுத்தோன்   )

கடலைக் குறிக்கும் பரவை என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லே மீனவரைக் குறிக்கும் சொல்லாம்  "பரதவர்:" என்ற சொல்லும்.  மீன்விலைப் பரதவர் என்பதும் காண்க.  இது பர + து + அ + அர் என்ற உள்ளீடுகளை உடைய சொல்லாகும்.  இதில் வல்லொற்று வரல்வேண்டும் என்று வாதிட்டாலும், அது  பயனின்மை கருதிப் பின் குறைவுறும். அஃதன்றியும் பரத்தவர் எனின் பரத்துக்கு உரியோர்  என்று பொருள்பட்டு   பொருள்  மயக்கம் விளைக்குமென்றும் அறிக.  பரதவர் என்பதே ஏற்புடை வடிவம்.   [பரத்துக்கு  =  கடவுட்கு]

முப்புறமும் கடல் சூழ்ந்த ---   கடல் நாகரிக ----  நாடு என்பதே பாரத நாடாயிற்று.
பரதவ மக்களின் நாகரிகத்தில் ஓங்கிய நாடே பாரத நாடு.  பாரதம் என்பதும் அது.  இம்மக்கள் அரசோச்சிய பண்டை நிகழ்வுகளை நினைவுகூர்வதும்   மகாபாரதம் ஆகும்.

மறுபார்வை பி ன்

திங்கள், 18 நவம்பர், 2019

நந்தலாலா : லாலா இசை வருவித்தல்

நந்தலாலா என்பது வட இந்திய மொழிகளில் இன்பொருள் தருதல்போலவே தமிழிலும் இனிய பொருளைச் சேர்க்கவல்ல தொடர்.

நம் தலைவர்.
நம் தலை  >  நந்தலா.

தலை என்பது தலா என்றும் திரியும்.

தலா பத்துக் காசு என்பது தலைக்குப் பத்துக் காசு என்பதே.

கவிஞன்  மன்னவா வா\கொஞ்சவா வா என்று எழுதினால் சில சொற்களை இணைத்து இசை வருவித்தலே ஆகும்.  சில வேளைகளில் இனிமையும் சேரும்.

நம் தலா > நந்தலா-லா -  லாலா லாலா!

இப்படி வந்துறும் லாலாவிற்கும் பொருள்கூட்டிக்கொள்ளுதல் இயல்பு.

உபயம் சொல் இருபிறப்பி.

கோவிலுக்குப் போனால் உபயம் என்ற சொல்லைக் கேட்கமுடிகிறது.

இன்று எல்லாத் தெய்வங்களுக்கும் பூசனைகள் செய்தற்குக் கோயில் பயன்பாட்டினை மொத்தமாக ஒருவர் மேற்கொண்டால் அதை உபயம் என்று சொல்வர்.

இச்சொல்லை இருவிதமாக ஆய்ந்து கூறலாம்.

உ + பயம் =  உபயம்.

இங்கு வந்த பயம் என்ற சொல் பயன் என்பதன் மறுவடிவமாகும்.   பயம் > பயன்.   அல்லது பயன் > பயம். இந்தப் பயம் என்பது அச்சம் அன்று. பயம் ஆவது பயன் தருதல் பயன் படுதல்.  இதற்குரிய வினைச்சொல்:  பயத்தல்.

"என்ன பயத்ததோ சால்பு" என்ற திருக்குறள் தொடரை நினைவுகூர்க.

இது போலும் இறும் வேறு சொற்கள்:  திறம்  >< திறன்;  அறம் ><  அறன்.

உ என்பது முன் என்று பொருள்தரும்.  இது சுட்டு.

உபயம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால்  "முற்பயன்பாடு" என்னலாம்.  பயன்பாட்டுக்கு முன்னரே இடம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது புரிந்துகொள்க.


இனி,  உ+ வை + அம் = உவையம்   இதில் ஐகாரம் குறுகி :  உவயம் >  உபயம் ஆகும்.  முன்னரே வைக்கப்பட்ட நிகழ்ச்சி.  வகர - பகரப் போலித் திரிபு.  போல இருப்பது போலி.

இச்சொல் இருவழிகளிலும் பொருள்தந்து ஒன்றே முடிபாய் நிற்றலின் இருபிறப்பி ஆயிற்று.

எழுத்துக்களும் சங்கதமும்


குறிப்பு:  சமஸ்கிருதத்துக்கு எழுத்துமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர்.  மந்திரக் குரல் ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக.  எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது.   வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது.  சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக.  சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள   . மண்டரின் எழுத்து மொழி இது விரியாமல் நிலைப்படுத்தியது    (18.11.2019)..

ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிறுமமே சிரமம்.

நம் முன்னோர் பல துன்பங்களைப் பெரியனவாய் மதிக்கவில்லை. சிலவற்றுக்கு ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் அவற்றைத் துருவி
ஆய்ந்தனர். சில உலகிற்குப் பெருமை தருவன என்றும் நினைத்தனர்.

அவர்களிடையே துன்பங்ககளின் சிறுமை பெருமை பல்வேறு கருத்துக்களையும் ஆன சொற்களையும் தோற்றுவித்தன. ஒரு சொல்லை  ஆய முற்படும் இதனில் சுருங்கக் கூறியுள்ளேம்.

இன்பங்களையும் இவ்வாறே  பெரிய சிறிய என்றனர்.

சிறிய துன்பங்கள் ஒன்றன் இடை இடைத் தோன்றி நீங்கின.  இடையிடை வருவன இடைஞ்சல்,  இடையூறு  என்றனர். முதல் இடை கடை என்று வேறுபாடின்றிச் சில துன்பங்கள்  " சிறுகு" எனப்பட்டன.  இவைகள் சிறு தொல்லைகள். ஒரு செயல்பாட்டு முன்னும் வரும், பின்னும் வரும் இடையும் வந்து குடையும் கொஞ்சம்.

சிரமம் என்பது சிறு துன்பமே.  இச்சொல் தன் பண்டை வடிவத்தில் "சிறுமம்" என்றிருந்ததற்கான சுவடுகள் அச்சொல்லிங்கண்ணே உள.  சிறுமம்  பின் சிறமம் ஆகிப் பிறழ்திருத்தமாகச் சிரமம் ஆயிற்று.  சிறுகு என்பதன் ஒப்புமையாக்கமாகவே சிறுமம் ஆகிய சிரமம் வந்துற்றது.  றகர ரகர வேறுபாடிழந்த சொற்களின் பட்டியலில் சிறுமம் > சிறமம் > சிரமமும் இடமறிந்து  புகுந்து நிற்றற்பாலது.

துன்பமோ சிரமமோ வருங்கால் நகுக.

அறிந்தீர் மகிழ்ந்தீர்.   

தட்டச்சுப் பிழைக்கு மறுபார்வை பின். 

வெள்ளி, 15 நவம்பர், 2019

Rigor mortis or மரித்திறுக்கம்.

ஆங்கில வைத்தியத்தில் ஒரு கலைச்சொற்றொடராகப் பயன்படுவதுதான் "ரிகோர் மோர்ட்டிஸ்"  (அல்லது ரிகார் மார்ட்டீஸ் }  என்ற இலத்தீன் மொழித் தொடராகும்.

ரிகோர் ----   இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
 இரிகோர்  -- இறுகூர்.

மார்ட்டீஸ் ---  மரித்தல்.   மரி > மார்.  மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.


செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.

பழைய இடுகைகள் காண்க.

அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.

அறிந்தின்புறுக.



அடிக்குறிப்புகள்

ஒரு பெரிய நோய்வந்துவிட்டால்  ஒரு வைத்தியனை வைத்து நோயைப் பார்க்கவேண்டும் என்பது தமிழ் நாட்டில் பேச்சு வழக்காகும். வைத்தியனை வைத்து என்றால் அவனை டப்பாவிற்குள் அடைத்து வைத்து என்று பொருளன்று. "அப்போய்ன்ட் ஏ டாக்டர்"  என்றுதான் அதற்குப் பொருள். கடினமான ஆங்கிலத்தையும் வெகு எளிதாக மொழிபெயர்த்தறிய வல்லது தமிழ்ப் பேச்சுமொழி என்று உணரவேண்டும்.  சீனக் கிளைமொழியான ஹோக்கியனில் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி அல்லது கார் என்பதை "பா ஹோங்  சியா" என்பார்கள்.  அப்படியென்றால்  "வண்டி அடி(த்தல்)" என்றுதான் சொற்களுக்கு அர்த்தம் என்றாலும் அச்சொற்கள் வழக்கில் தரும்பொருள்  உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி (பயன்பாடு)  என்பதே ஆகும்.  In Chinese intonation is important  and changes must be adverted to.  தமிழைப் போலவே சொல்லையும் பொருளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறம்படைத்தவை சீனக்கிளைமொழிகள்.  வைத்துப்பார்க்கப்படுவோனே  பின் "வைத்தியன்" என்ற புனைச்சொல்லால் குறிக்கப்படுவோன் ஆயினன்.

வை+  து  + இ + அன்  >  வைத்தியன்.

இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே  டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி   ( அப்பி இடு அல்லது இட்டுவை )  -  இடப்பி >  டப்பி > டப்பா.

எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.

வியாழன், 14 நவம்பர், 2019

ஆபத்து என்ற சொல்

இது ஒரு மூவசைச் சொல்.

ஆநிரைகளைக் கைப்பற்றுதல் பண்டைத் தமிழர் போர்த் தொடக்க நடவடிக்கை.    ஆ பற்றுதல்  எனப்படுவது  ஆ பற்று  >  ஆ பத்து என்று மாறியுள்ளது.

ற்று என்பது த்து என்று மாறுவது எழுத்துத் தமிழ் -  பேச்சுத் தமிழ் இவற்றிடை நிகழும் இயல்புப் பெருநிகழ்வாகும்.   இதைப் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.
இடுகைகள் சில ஈண்டு குறைவுண்டன  (இன்மை).

ஆ பற்றுதல் என்பதில் ஐ யுருபு தொக்கது.

நாளடைவில் ஆ என்ற சொல் பேச்சு வழக்கின்றி மறைந்ததும் தமிழரசு மாறிப் பிற நிகழ்ந்தமையுமே  இதன் பொருள் சற்றுத் திரிந்து  பேரிடர் என்னும் பொதுப்பொருளில் இச்சொல் வழங்குதற்குக் காரணங்களாவன.

சிறப்புப் பொருள் திரிந்தமையில்  திரிசொல்.

மாடு பிடித்தல் என்ற தொடரில் வலிமிகாமை போலுமே இது.  காட்டை வெட்டுவோன் காடுவெட்டி.  காட்டுவெட்டி அன்று.  இங்கும் இரட்டிக்கவில்லை.

காடு > காடை.  குருவிப்பெயர்,  இரட்டிக்கவில்லை.   காட்டில் வாழும் ஒரு வகைக் குருவி என்பது பொருள்.  காரண இடுகுறி.

காவு தாரி  >  கௌதாரி.    (முதனிலைக் குறுக்கம் ).  காடுகள் பெருவாரியாகத் தரும் பறவை.  அவை காட்டில் பெரிதும் வாழ்வன என்று பொருள்.  சில வீட்டுப் பக்கங்களுக்கு  -    பின்பு இடம் மாறின.

குறிப்பு: 

ஆபத்து என்பதில் வலிமிகாமைக்குக் காரணங்கள்:

1..  ஆப்பத்து  <  ஆப்பற்று என்றால்,  ஆப்பு + அற்று என்று பிரிந்து   "ஆப்பு வைக்காமல்" என்ற பொருள் தந்து பொருள் மயக்கு உண்டாம்.

2.  இது சொல்லாக்கம். வாக்கியத்தில் வரும் நிலைமொழி வருமொழி அல்ல.


 காவு என்ற சொல் பயன்பாடு:
ஆரியங்காவு.  காவு கொடுத்தல்.

காடு என்பது இருபிறப்பிச் சொல்.  கடு > காடு. (  கடுமை மிக்க இடம்.  வேங்கடம் என்பதில் கடு> கடம் எனினுமதுவாம்.  காத்தல் : கா > காவு. காப்பு.

பின் உரையாடுவோம்.

மறுபார்வை பின்

சனி, 9 நவம்பர், 2019

வித்துவான் பற்றிய இன்னொரு சிந்தனை

வித்துவான் என்ற சொல்பற்றி முன்பதிவுகள் இட்டதுண்டு.  அவற்றுள் ஒன்று அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லை வித்துவன் என்று எழுதுவோருமுண்டு.  அன், ஆன் என்பன இரண்டும் தமிழ்விகுதிகளே.

விள் என்பதோர் அடிச்சொல்.  வித்து விதை முதலிய பலவேறு வடிவங்கள் இதனோடு தொடர்பு கொண்டவை ஆகும்.

எச்ச வினையினின்று சொற்களைப் பிறப்பிக்கும் முறை பாலி முதலிய மொழிகளில் காணப்படுகிறது.

விளைத்தல் என்பதினின்று விளைத்து,  விளைத்த என்ற எச்ச வினைகள் தோன்றும்.  விளைத்து என்பது எச்சவினை வடிவத்திலே பெரிதும் காண்புறும் சொல்லாயினும் அதைப் பெயர்ச்சொல்லாய்க் கருதுவதற்கு இறுதித் துகரத்தைப் பெயராக்க விகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.  கொள் > கொளுத்து என்பது வினையாகவும் பெயராகவும் பயன்பாட்டிற்கேற்பப் போதரும்.  கொளுத்து என்பது கொண்டி அல்லது தாழ்ப்பாள்.  விளைத்து எனற்பாலதும் அவ்வண்ணமே   போதரத் தக்கது.

விளைத்து என்பது இடைக்குறைய வித்து என்றாகிவிடும்.   வித்து என்பது பெயரும் வினையுமாம்.  ளைகாரம் கெட்டது.

எதனையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும்  ஏற்புடைமை மாறாதது காணலாம்.

அடிக்குறிப்பு.


வித்துவான்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

வியாழன், 7 நவம்பர், 2019

திடகாத்திரம் இனிய படைப்புச்சொல்

இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இது ஒரு புனைவுச்சொல்லே.

ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:

அவன் தன் உடலின் திடத்தினை      {....திட(ம்)  }

உணவினாலும்  ஏனை  நடபடிக்கைகளாலும்   காத்துக்கொண்டு   {....கா(த்து ) .....}

இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான்   {....இரு....}

அம் என்பது ஒரு விகுதி.

அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம்.  பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.

எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

திட(ம்)  +  காத்து +  இரு +  அம்.


=  திடகாத்திரம்

ஆகிவிட்டது.

காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை

கா+ திறம்  >  காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.

இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.



ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிருஷ்டி காட்டும் சொல் அமைப்புத் தந்திரம்

உருள் >  உருட்டு,   திரள் > திரட்டு என்றெல்லாம் தமிழில் வினைச்சொற்கள் முடிகின்றன. இவற்றைப்  பார்க்கும்போது ஒரு சொற்படைப்பாளனுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது.  "ட்டி"  என்று ஒலிக்கும்படியாக ஏன் ஒரு சொல்லைத் தோற்றுவித்தலாகாது? என்பதுதான் அது.

இறைவன் உலகின் உள்ளிருக்கும்படியாக ஒன்றைத் தோற்றுவிக்கின்றான். அதைப் புதுவிதமாகச் சொல்லவேண்டும்.

உள்ளிரு என்பதை எடுத்துக்கொண்டான்.

உள்ளிரு  >  (முறைமாற்ற )  >  இரு + உள்.

இரு + உள் +(  து + இ.)

இவற்றுள்,  இ என்பது இறுதி  வினையாக்க விகுதி.
து என்பதும் வினையாக்க விகுதிதான்.

இரு + உள்  + தி.

து+ இ இரண்டும் இணைய, தி என்றாகும்.

ள் + தி  =  டி என்றாகும்.

அகர வருக்கத்துக்கு   சகர வருக்கம் மிக்கப் பொருத்தமான  திரிபினை வழங்கும்.

எ-டு:  அமணர் >  சமணர்.
             அட்டி >  சட்டி   ( அடுதல் :  சமைத்தல்)
             எட்டி > செட்டி.
             அமை > சமை.
              அவை > சவை > சபை.

இரு + உள்  + தி  >  சிருட்டி.

சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.

இல்லாத ஒன்றை இவ்வுலகின் உள்ளிருக்கும்படி செய்தல்.

சிருஷ்டி :  நல்லபடி அமைந்த சொல்.

எழுத்துப்பிழைகளிருப்பின் திருத்தம் பின்பு.


சனி, 2 நவம்பர், 2019

துரை என்ற சொல்

தன் கீழ் பணிபுரிவார் அ ல்லது பணிந்து நிற்பார் யாராக இருந்தாலும் அன்னவர்களை நல்லபடி பயன்படுத்திக் கொள்பவர் யாரோ அவரையே துரை என்னலாம். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களுள் இத்தகைய திறன் உடையவர்களே துரைகளாக நேர்மிக்கப்ப்  பட்டனர். துரை என்பது  பதவிப் பெயர் அன்று எனினும் அவர்களைத் துரைகளாக மதிக்கத் தமிழர் அறிந்திருந்தனர்.

துர என்ற அடிச்சொல்லிலிருந்தே துரை என்ற முழுச்சொல் வருகிறது. துர+ ஐ = துரை ஆகும்.

பாரம் தாங்குவோனுக்குத் துரந்தரன் என்றும் துரந்தரி என்றும் பெயருண்டு. இது துர+அம்   (துரம்) என்பதிலிருந்தே வருவதால்  நிறுவாகப் பாரத்தைச் சுமக்கும் ஒரு பண்பு நலனையும் துர என்னும் சொல் கொண்டுமுன் நிறுத்துகிறது.

துர என்பதன் அடிச்சொல் துரு - ( துருவு  - துருவுதல்) ஆகும். எதையும் துருவிச் சென்று ஆய்தல் அல்லது நடைபெறுவித்தல் என்ற தன்மையும்கூட இதில் அடங்கியுள்ளது.

துரத்துதல் என்ற வினைச்சொல்லும் நீங்கிச் செல்வோனை விடாது பின்செல்லும் வினைத்திண்மையைக் காட்டவல்லது.

dura -  giver, granter, one who  unlocks.  Skrt. இதுவும் பொருந்தும் பொருளையே கொண்டுள்ளது.

துரப்பணம் என்பது   துளையிடுகருவி.  துர+பு+ அணம்.

ஒன்றை விரட்டிச் செல்கையில்  நாமும் முன்னைய இடத்தை நீங்கிச் செல்வதால்  தொலைவாகச் சென்றுவிடுவோம்.   இதிலிருந்து    துர+ அம் = தூரம் என்ற சொல் தோன்றுகிறது.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தொல் > துர் > துர.> தூரம். 
லகர ரகரத் திரிபு.
தொல் > தொலைவு.

இவை எலாவற்றுக்கும் அடிப்படை தமிழின் துருவுதல் என்ற வினையே ஆகும்.

அறிக மகிழ்க.