இது ஒரு மூவசைச் சொல்.
ஆநிரைகளைக் கைப்பற்றுதல் பண்டைத் தமிழர் போர்த் தொடக்க நடவடிக்கை. ஆ பற்றுதல் எனப்படுவது ஆ பற்று > ஆ பத்து என்று மாறியுள்ளது.
ற்று என்பது த்து என்று மாறுவது எழுத்துத் தமிழ் - பேச்சுத் தமிழ் இவற்றிடை நிகழும் இயல்புப் பெருநிகழ்வாகும். இதைப் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.
இடுகைகள் சில ஈண்டு குறைவுண்டன (இன்மை).
ஆ பற்றுதல் என்பதில் ஐ யுருபு தொக்கது.
நாளடைவில் ஆ என்ற சொல் பேச்சு வழக்கின்றி மறைந்ததும் தமிழரசு மாறிப் பிற நிகழ்ந்தமையுமே இதன் பொருள் சற்றுத் திரிந்து பேரிடர் என்னும் பொதுப்பொருளில் இச்சொல் வழங்குதற்குக் காரணங்களாவன.
சிறப்புப் பொருள் திரிந்தமையில் திரிசொல்.
மாடு பிடித்தல் என்ற தொடரில் வலிமிகாமை போலுமே இது. காட்டை வெட்டுவோன் காடுவெட்டி. காட்டுவெட்டி அன்று. இங்கும் இரட்டிக்கவில்லை.
காடு > காடை. குருவிப்பெயர், இரட்டிக்கவில்லை. காட்டில் வாழும் ஒரு வகைக் குருவி என்பது பொருள். காரண இடுகுறி.
காவு தாரி > கௌதாரி. (முதனிலைக் குறுக்கம் ). காடுகள் பெருவாரியாகத் தரும் பறவை. அவை காட்டில் பெரிதும் வாழ்வன என்று பொருள். சில வீட்டுப் பக்கங்களுக்கு - பின்பு இடம் மாறின.
குறிப்பு:
ஆபத்து என்பதில் வலிமிகாமைக்குக் காரணங்கள்:
1.. ஆப்பத்து < ஆப்பற்று என்றால், ஆப்பு + அற்று என்று பிரிந்து "ஆப்பு வைக்காமல்" என்ற பொருள் தந்து பொருள் மயக்கு உண்டாம்.
2. இது சொல்லாக்கம். வாக்கியத்தில் வரும் நிலைமொழி வருமொழி அல்ல.
காவு என்ற சொல் பயன்பாடு:
ஆரியங்காவு. காவு கொடுத்தல்.
காடு என்பது இருபிறப்பிச் சொல். கடு > காடு. ( கடுமை மிக்க இடம். வேங்கடம் என்பதில் கடு> கடம் எனினுமதுவாம். காத்தல் : கா > காவு. காப்பு.
பின் உரையாடுவோம்.
மறுபார்வை பின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக