செவ்வாய், 2 டிசம்பர், 2014

இறையனார் அகப்பொருளிலிருந்து "சென்றே ஒழிக"

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா பல்யாண்டு கறுத்தவரை
வென்றான் விழிஞம்கொண் டான்கடல் ஞாலம் மிக அகல் இது
அன்றே அடியேன் அடிவலங் கொள்ள  அருளாகவே (275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன் பற்றியது என்ப‌. But please see  last few paragraphs herein. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்  பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி ஊரனும்:  அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

தின்னத் தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய தீனிகள் அளித்ததுக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு! உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன் மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி,

கல் வேண்டா: அவன் போய்விட்டானென்று நீங்கள் உயிர் விடுவதா? கல் ‍ நடுகல்;( நீங்கள் நடுகல்2 ஆகவேண்டாம்.)

பல்யாண்டு கறுத்த வரை வென்றான்:  அவன் கறுத்துவிட்ட பழைய மலையை வென்றவன்; ( பல்லாண்டு சினந்து போர்செய்து மலையை வென்றவன் எனினுமாம். ) கறுத்தல் ‍ சினத்தலும் ஆகும். Rocks become darkened  owing to raining for a long time.  (old rocky mountain ) வரை:  mountain.
...
விழிஞம் கொண்டான்:  கடற்போரிலும் வென்றவன்; ( உங்கள்   தலைவன், வீரன்; நாட்டுப் பற்று உடையவன். அவன் வென்ற  இடங்களை விட்டு நீங்கிவிடமாட்டான்.)


அடியேன் அடிவலங் கொள்ள -  அடியேனின் அடிகள் வலமாகச் -சென்று தேடுவதற்கு,  அடிவலம்கொள்ள -: நடந்து  சுற்றித் தேட‌

கடல் ஞாலம் மிக அகலிது அன்றே :  கடலால் சூழ்ந்த இவ்வுலகு மிகவும் அகன்றது அன்றோ?

(ஆகவே விரைந்து ஒன்றும் நடந்துவிடாது, காலம் தேவை.  இப்போது எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறானென்பதை  உடனே அறிந்து கொள்வதும் அரிதே ஆகும்.)

அருள் ஆகவே: யாவும் நன்று ஆவதற்கு அருள் உண்டாகட்டும் என்றபடி


தலைமகன் எதுகாரணமாகச் சென்றுவிட்டானென்பதற்கு இப்பாடலில் வெளிப்படைக் குறிப்பு எதுவும் இல்லை, பரத்தை காரணமாக என்பது உரை எழுதியோர் கூற்றேயாகும். கல் வேண்டா என்றதால் பிறபெண்ணை நாடிச்சென்றிருத்தல் கூடுமென்பதும் அவள் பரத்தையாய் இருப்பாள் என்பதும் ஊகமாம்.(யூகம்). உண்ணுதல் என்னாது தின்னத் தந்த என்றதனால் புல் முதலியன கன்று ( or கன்று புல் முதலியன....... ) தின்னத் தந்த என்பது பெறப்படும். வீட்டில்  கன்றுக்குத் தீனி உட்பட எல்லாவற்றையும் கவனிப்பவன் என்பதனால் கவலை கொள்ள வேண்டாமை அறிகிறோம். பாடலுக்கு உரையாசிரியர் உரை ஏதுமில்லை.தலைப்புத் தந்ததே உளது அதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. பாடல் புனைந்தவர் யாரென்பது தெரியவில்லை.

தலைமகள் வீண்கவலை காட்டுவது இப்பாடல்.

அருள் ஆகவே என்றதனால் வந்தவன் முதியோனாய் இருக்கலாம். தான் தேடிக் கண்டுபிடிக்க நாளாகலாம் என்பதால் அவன் தலைமகனால் அனுப்ப‍ப்பட்ட தூதுவனல்லன் என்பதே சரியாகும்


1 உதாரணம் என்பது மிக்க அழகாய் அமைந்துவிட்ட ஒரு சொல். அது இது உது என்பவற்றில் உது:  முன் நிற்பது; ஆர் : நிறைவு; அண் : பொருளால் அண்மையில் இருப்பது; அம் : விகுதி;  ஆகவே உதாரணம் என்றனர்.

2 þíÌ ¯¨Ã¢ø ¿Î¸ø ±ýÈÐ À¢½õ Ò¨¾ò¾À¢ý Ò¨¾ò¾ þ¼ò¾¢ø
¨Åì¸ôÀÎõ «¨¼Â¡Çì ¸ø¨Ä. Not used here in the sense it has
been used in ancient grammar works. (Not a "technical term" or "term of art" in the commentary herein). The writer at this point was neither referring to nor having any interest in those works for her purpose of interpretation.  

Footnote 2 added on 12.3.2018.
Will edit later

கருத்துகள் இல்லை: