மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பர். கீர்த்தி என்னும் சொல் அமைந்தது எவ்விதமோ? இதுபோது காண்போம்.
சீர் > சீர்த்தி. (தி - விகுதி)
இது பின்பு கீர்த்தி என்று மாறியது.
சகர வருக்க எழுத்துக்கள் (ச, சா, சி ....எனும் தொடக்கத்தன )
ககர வருக்கமாகத் திரிபும்.
எ-டு : சேரலம் > கேரளம் .
( சீர்வாணி ) > கீர்வாணி.
தக்கிணை > தச்சிணை > தட்சிணை. (சேவைக்குத் தக்க இணை என்று பொருள் )
பல மொழிகளில் இத்தகு திரிபுகள் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக