ஆட்டோ எனில் தானே இயங்கும் ஒன்றென்பது சொல்லமைப்புப் பொருள்.
ஆட்டோ என்ற முன்னொட்டுப் பெற்ற பல ஆங்கிலச் சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆட்டோமேட்டிசம் என்பது காண்க,
ஒருவகையில் எல்லா இயங்கி வகைகளும் ஆட்டோதாம் என்றாலும்
இப்பெயர் தென்கிழக்காசிய நாடுகளில் காணக்கிடைக்காத, இந்திய நகரங்களில் மட்டும் உள்ள ஒரு மூவுருளை வண்டியைக் குறிக்கிறது.
இது பெரிதும் வாடகைக்குக் கிடைக்கும் வண்டிவகை யாகும். ஆட்டோக்காரன் என்பது அதனை ஓட்டுகிறவனைக் குறிக்கிறது.
இதனை ஒரு காரண இடுகுறிப்பெயராகக் கொள்ளலாம். நாற்காலி என்பது நால் கால் உள்ளது என்று பொருள்பட்டாலும் நாலுகால் உள்ள நாய் என்னும் விலங்கை அது குறிக்காது. இப்படிப் பார்த்தால்
உலக மொழிகள் பலவும் குறையுடையவைதாம், சொற்புனைவுக்கு ஒரு காரணமிருந்தாலும் அக்காரணம் முழுமையாய்க் குறிக்கும் பொருளைச் சென்று தழுவுதல் இல்லை.
ஆட்டோ என்பதைத் தானி என்று மொழி பெயர்த்துள்ளனர், இந்தச் சொல்லும் ஆட்டோ என்பதில் உள்ள குறை நிறைகளை உள்ளடக்கியவாறே அமைந்துள்ளது. அங்ஙனம் இன்றி ஒரு சொல்லை அமைத்தல் இயலாது என்பதால் அது ஏற்புடையதே ஆகும்.
ஆட்டோவைத் தானி என்று மொழிபெயர்த்தவர் பாராட்டுக்குரியவர்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக