திங்கள், 8 டிசம்பர், 2014

கொலம்பஸ் பெயர்க்கு அரைவிடுதலைதான்.

கிரந்தி என்னும் பறங்கிப் புண் நோய்
புத்துல   கிருந்து இத்தரை வரைக்கும்
பரப்பிய கடலோடி கொலம்பஸ் என்றனர்,
பழைய எலும்புகள் ஆய்வு செய்ததில்
நிலையை மாற்றிக் கொண்டனர் அறிஞர்
ஐரோப் பியத்தில் அதற்கு முன்னர்
வாழ்ந்தோற் கந்நோய் இருந்தமை கண்டனர்,
கொலம்பஸ் அதனைக் கொண்டுவந் திருக்கலாம்'
வலம் அழி அந்நோய்   முனம்இருந்  திருக்கலாம்
பின்னது பெருவலை பின்னியு  மிருக்கலாம்
என்று பலவா றியம்பி நிற்பதால்
கொலம்பஸ் பெயர்க்கும்  அரைவிடு தலைதான்.
நிலம்பழி நிலைமை சற்றுகுறைந் ததுவே.



முனம்  =  முன்னம்   முன்பு.    வலம் =  வலிமை; உடல் நலம்.
பெருவலை ‍=  பலரையும் பிடிக்கும் வலைபோன்ற நோய்ப் பரவல்.
நிலம்பழி ‍= இவ்வுலகம் பழிக்கும்


கருத்துகள் இல்லை: