ஞாயிறு, 7 டிசம்பர், 2014

the suffix "thu" a brief exploration

இப்போது  :"து " என்னும் பெயர்ச்சொல் ஆக்க விகுதியைப் பார்க்கலாம்

து என்னும் விகுதி தொன்று தொட்டுத் தமிழில் பல்வேறு வகைகளில் பயன்பாடு கண்டுள்ளது. சுட்டுப் பெயர்களான  அது  இது  உது என்பவற்றில் அது உள்ளது.  வினாப் பெயரான எது என்பதிலும் உளது. ஏது  என்பதிலும் இருக்கிறது.

ஆனால் மனம் என்ற சொல் "மனது"" என்று மறுவடிவம் அடைந்தபோது  அது (அதில் ஏற நினைத்த து விகுதி) வெற்றி பெறவில்லை.மனம் என்பது முன்னரே பெயர்ச்சொல் ஆகிவிட்டபடியால் அச்சொல்லில் உள்ள மகர ஒற்றைக் கெடுத்து, அதில் து விகுதியைச் சேர்த்ததில் தமிழாசிரியன்மாருக்கு  உடன்பாடு இல்லை.  து என்பது  சு என்று திரிவது விதிப்படியான திரிபு என்றாலும் பின்பு (மனது  > ) மனசு என்றானது  பேச்சு வழக்குச் சொல் என்றே கொள்ளப்படும். மனஸ் என்பது அடுத்தவீட்டுத் திரிபு. ( Pl see footnote  1 below)

ஆனால் வயது என்பது ஏற்றுக்கொள்ளப்படும் இது தமிழன்று என்று சொல்லிவிட்டால் அதை விளக்கிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. நேரம் மிச்சம். ஆனால் முன் இடுகை காணவும். 

திருடன், காவலனின்   கையிலகப்பட்டுக் கொண்டதைக் காட்டும் சொல்லாகிய "கைது " என்பதில் அது வழக்குப் பெற்றுள்ளது. விளக்குவதற்குத் தொல்லையான இதைத்  தமிழன்று என்றால் வேலை எளிதாகிவிடும். கை + து  = கைத்து  என்று ஏன்  வரவில்லை என்பது கேள்வி . கைத்து என்று வலி மிக்கு வந்தால் வேறு பொருளாகிவிடும்.

விழு > விழுது என்ற சொல்லில் அது அழகாக அமர்ந்து கொண்டுள்ளது காணலாம்.

மயக்கம் தருவது ..> ம(  யக்கம் தருவ) து >  மது . இடையில் உள்ளனவற்றை
விழுங்கிவிட்டால்  உங்களுக்கு மது கிடைத்துவிடும். இதென்னவாம்? இங்கு து விகுதியா??


-------------------------------------------------------------------------------

"ஆசைப் பட்டது நானல்ல என் மனது என் மனது 
அவசரப் பட்டது நானல்ல என் வயது , என் வயது"
என்பது ஒரு திரைப்பாட்டின் வரிகள்.  Hope I've rendered this correctly.  கவிகள் இப்படிப் புனையும்போது  தமிழாசிரியர் 
எத்தனை நாட்களுக்கு அவர்களை  எதிர்த்து நிற்க இயலும் 
என்று தெரியவில்லை. 

கருத்துகள் இல்லை: