பொய்ம்மெய் (பொய்யான உடம்பு) என்பது பொம்மை! மரப்பாச்சி என்பது என்ன?
இது மரத்தால் ஆன பொம்மை.
மரப்பாவை என்ற சொல்லோடு பெண்பால் விகுதியான "சி" சேர்ந்துகொண்டது.
மரப்பாவை ஆணுருவாகவோ பெண்ணுருவாகவோ இருக்கலாம். பெண்போல் செய்யப்பட்ட பாவைக்கு "சி" போட்டது பொருத்தம்தான்.
மரப்பாவைச்சி என்பது மரப்பாச்சி என்று மருவிற்று.
மரப்பாவையில் மர என்ற அடை இன்றி வெறும் "பாவை" என்று மட்டும் சொன்னால், அது பெண்ணைக் குறிக்கும்.
"பெண்பாவாய்" என்று விளித்தலும் உளது. பெண் என்பதை அழுத்திச் சொல்வதாய்க் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக