சனி, 25 அக்டோபர், 2014

லகரம் னகரமாய் ...........

பல சொற்களில் லகரம் னகரமாய் மாறியிருத்தலை யாம் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம். அறிஞர் பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டு:

கல் >  (கன்) > கனம். (கல் கனமானது).
கல்லுதல்  தோண்டுதல்.
கல் > கன் > கன்னம் > கன்னக்கோல். 

பேச்சு வழக்கில் நல்லா என்பது நன்னா என்று வருகிறது என்பது நீங்கள்
அறிந்தது

அன் விகுதிக்கு முந்தியது அல். பல சொற்களில் இன்னும் அல் விகுதி காணப்படுகிறது:

வள்ளல் ‍;  இளவல்.  தோன்றல் (தலைவன் என்ற பொருள்).

நல் என்பதன் அடிப்பிறந்த நன் > நன்னா என்பதை மேலே  குறித்துள்ளேன்.

நல் என்பது ந என்று குறையும்.

நப்பிள்ளையார், நச்செள்ளையார் என்ற சங்கப் புலவர்களின் பெயர்களில்  வரும்  ந என்பது நல் என்பதன் கடைக்குறை.

அதனிலும் இது பெரிது, அதனினும் இது பெரிது என்பனவற்றில் 
லகரத்திற்கு ன்கரம் ஈடாக நிற்றல் அறிக.

எனில்  > எனின் .
இதனாலே < இதனானே.

கருத்துகள் இல்லை: