சனி, 2 செப்டம்பர், 2017

சாமானியம் என்னும் சொல்



சாமானியம்,  சாமானியர்.

மானுதல் என்பதன் பொருள்  ஒத்தல், மானல் (மான் + அல்) ஆகியவை.
ஒத்தல் என்பது ஒரு பொருளாதலின்,  இச்சொல் (எச்ச நிலையில்) ஓர் உவம உருபாக பண்டை இலக்கணங்களில் சொல்லப்பட்டுள்ளது.   இங்ஙனம்  வருங்கால்  இதற்குப் “போல”  என்பது பொருளாம்.
சாமானியம் என்ற சொல்லை ஆய்கையில், இப்பொருளே உதவுவதால் மானுதல் என்பதன் மற்ற பரிமாணங்களை இங்கு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதில்லை.
பண்டைக் காலத்தில் மனிதன் அவனுடைய செல்வச் செழிப்பையும் தொழிலையும் பொருத்தியே மதிக்கப்பட்டன். அவன் பயன்படுத்திய நெல், ஏனை உணவுப்பொருள்கள்(தானியங்கள்), மாடு கன்று என்பன அவற்றுட் சில.  அப்போதெல்லாம் செல்வம் உடையவன்   அஃது இல்லாரை மதிக்கவில்லை. ( இப்போதும் இல்லை, கவலை வேண்டாம்).  இதை மாற்ற அக்காலத்து அறிஞர்  பிறருக்குத் தருதல் (தருமம்)  உயர்ந்ததென்றும் வானவர் உலகு வழிதிறந்திடும் என்றும் போதித்துப் பார்த்தனர். ஆனால் அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கால முழுவதும் அடைந்தார்களில்லை.  சில வேளைகளில் அவர்கள் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஏனைக் காலங்களில் மக்கள் அப் போதனை  போற்றவில்லை.  குமுகப் படிநிலைகள் (social stratification)  இவ் வுயரிய கருத்துக்களைக் கடைப்பிடியாமையினால் உருவாகின .
ஆகவே நன்மையும் தீமையும் ஒருங்கு தொடர்ந்தன.
பணமில்லாதவன் பிணம் என்ற பழமொழி  எழுந்தது.
ஒரு பாடல் இப்படி வருகிறது:
உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே இருப்பதும் தவறே;
கல்லார் எனினும் காசுள்ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

ஒரு பழமொழி:

பணம் பந்தியிலே, குலம் குப்பையிலே.
 
உயிர்வாழ்க்கைக்கு ஆதாரம்   செல்வம். ஏழ்மை நடைப்பிணம் ஆக்கிவிடும்.
சாமானியர் என்றால் செத்தவரை ஒத்தவர் என்பது பொருள்.   மானியர் = ஒத்தவர்.  சா = சாவு, ஆகுபெயர் போல செத்தவனைக் குறிக்கிறது.
செல்வம் இல்லாதவன், செத்தவனை ஒத்தவன்.  சாமானியன்.   சாவை மானுகின்றவன்.  செத்தானை ஒத்து வீழ்ந்தவன்.  ஓர் கொடிய நிலையைக் காட்டும் இச்சொல்லைத் தமிழ்ச்சங்கம் போன்ற பண்டை அமைப்புகள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டா.  எனினும் வறுமையின் கொடுமையைக் காட்டும் பல பாடல்கள் தமிழிலக்கியத்தில் உண்டு.   வறியோர்க்கு உணவளிக்க மணிமேகலை அட்சய பாத்திரம் ஏந்தினாள்.  கோவலன் கொலையுண்டதற்கும்  அவன் செல்வமிழந்தமையே காரணம்.  பொதுவுடைமைக் கருத்துகள் மார்க்சிடம் ( Karl Marx) எழுந்தமைக்கும் வறுமையே காரணம்.  இந்தச் சாமானியச் சொல் புனையப்பட்டதற்கும் வறுமையே காரணம்.  வறியோரைச் செத்தாரை ஒத்தார் என்*கிறது சொல்.  இதற்கு வேறு பொருள் கூறினால்  அது ஓர் இடக்கர் அடக்கல் இரகமே ஆகும்.

 Note (official use).

To edit.  Beware of auto-correct generated errors and redundant dots. 




சத்தும் சத்துணவும். த(ன்)+து



பண்டைக் காலத்தில் உடலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு பற்றிச் சில நம் முன்னோர் அறிந்திருந்தனர். என்றாலும் இற்றை அறிவியலாளர் அறிந்துள்ள அனைத்தையும் அவர்களும் அறிந்திருந்தனர் என்று சொல்வதற்கில்லை. எடுத்துக்காட்டாக வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்து பற்றி அவர்கள் அறிந்திருந்த்து குறைவே ஆகும். அதற்கான பெயர்களும் அவர்களிடம் இருந்த்தாகத் தெரியவில்லை, உயிர்ச்சத்து என்பது தற்கால மொழிபெயர்ப்பு. ஆனால் நல்ல நாட்டு வைத்திய முறையை அறிந்திருந்தனர்,

அறிவியல் கட்டுரைகளை வெளியிடக் கலைக்கதிர் என்றோரு இதழ் ஐம்பது அறுபதுகளில் வெளியிடப் பட்டு வந்த்து.  பல புதிய மொழிபெயர்ப்புச் சொற்கள் ஆங்கு வெளிவந்தன.  அவையெல்லாம் இப்போது கிடைக்கவில்லை;  எங்காவது யாராவது வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.  எம் கைகட்கு எட்டவில்லை. கணினி பயன்பாட்டில் வராத அக்காலத்தில் அரசு அவற்றைக் கைப்பற்றி எங்காவது வைத்துள்ளதா என்பது தெரியவில்லை; பல்லாயிரம் இதழ்கள் மற்றும் அச்சிட்ட எழுத்துப்படிகள் இலங்கைப் போரிலும் அதன்முன்னும் அழிந்தன.

இப்போதுசத்து  என்ற சொல்லைக் கவனிப்போம்.

சத்துணவு என்ற சொல்லாட்சியும் இருக்கின்றது.

சத்து என்பது எங்க்னம் அமைந்த்து?

தத்து என்ற சொல்லாக்கம் தன், து என்ற இரு சிறு சொற்களை உடையது.  இதற்குதான் உடையது  அல்லது தன்னில் உடையது என்பது பொருளாகும்.

தத்துதல் என்னும் சொல்,   தத்தித் தத்தித் தவழும் கிளி என்ற வாக்கியத்தில் வருவது  வேறுதத்து  ஆகும்,   ஆகவே அதை இங்கு இட்டுக் குழப்புதல் ஆகாது.

தகர வருக்கத்துச் சொற்கள் சில சகர வருக்கமாகத் திரியும்.   எடுத்துக்காட்டு:  தசை >  சதை. இச்சொல்லில் அத்துடன் எழுத்து முறைமாற்றுமுண்டு. த்த்து என்றதான் உடையது:  என்ற பொருள்படும் சொல்லில் முதலெழுத்து மட்டும் மாறி  அது சத்து என்று அமைந்த்து.    சத்து என்றால் தான் உடையது. தன்னில் இருப்பது என்று பொருள்.  இதில் முதலெழுத்து மாறிற்றே அன்றிப் பிற மாறவில்லை.

அதாவது ஒரு பொருளில் உள்ளிலிருந்து கிடைப்பது என்ன என்பதைச் சத்து என்ற சொல் தெரிவிக்கிறது. ( "கி(டைப்பு"  )

கடினமில்லாத்து.  மென்மை உடையது என்று பொருள்படும் சது  (சதுப்பு)  என்ற சொல்லினோடும் தொடர்புடையதாய் இருப்பதால் சத்து என்பது ஓர் இருபிறப்பி ஆகும்.

இது பிறமொழிகளிலும் சென்று சேவை புரிந்து நமக்குப் பெருமை சேர்க்கும் சொல் ஆகும்.

இதனை அறிந்து மகிழுங்கள்.


வியாழன், 31 ஆகஸ்ட், 2017

அரணும் சரணும்.



அகர வருக்க்ச் சொறகள் சகர வருக்கமாகத் திரியும் எனற்பாலது போதுமான அளவில் முன்னர் நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது.  இப்பழைய இடுகைகளை மீண்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.

இன்று நாம் அணுகவிருக்கும் சொல், முன்னர் ஈண்டும்  பிற தளங்களிலும் யாம் வெளியிட்டதே  ஆகும்.  ஒரு நோட்டுப் புத்தகத்தில் 1  இவற்றைப் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் சொற்கள் அறியப்படும்போது பட்டியலை வளர்த்துக் கொள்ளுங்க்கள்.

அகர வருக்கம் சகர வருக்கமாகத் திரிவுறுகையைக் காட்டுவதற்குப் பெரும்பாலும் அமண் > சமண் என்பது காட்டுவோம்.  அதாவது எடுத்துக்காட்டாக.

ஆடி > சாடி.  ( நீர்  ஆடும்  கலம் ).
அடு > அட்டி > சட்டி ( அடுதல் = சுடுதல் ).
அடை > சடை. (>ஜடை).
அடர்ந்த மயிர் திரிக்கப்பட்டுத் தொங்குவது ).

“தாழிருஞ்சடைகள் தாங்கித்
தாங்கருந்தவமேற் கொண்டு” (கம்)

அட்டை >  சட்டை.   ( இது உடலை அடுத்து நிற்பது என்னும் பொருளில்.    அடு > சடு..  அட்டை > சட்டை.   இது முன்னர் பாம்புச் சட்டையைக் குறித்த்து).
இங்ஙனமே  அரண் என்பதும் சரண் என்று திரிந்த்து.

சரண் என்றால் பாதுகாத்தல் என்று பொருள்.  அரண் புகுந்தேன் =  பாதுகாப்பு வளையத்துள் புகுந்தேன்.
சரண் புகுந்தேன் எனினுமது.  உன் அரண் அடைந்தேன் ;  பின் அது உன்னிடம் சரண் அடைந்தேன் என்று வழக்கு அல்லது சொல்லும் விதம் மாறிற்று.  எனினும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. அடிப்படை இன்னும் தெளிவாகவே உள்ளது.

அரண் என்பதன் உண்மைச் (ஆதிச் ) சொல்லமைப்புப் பொருள் இன்னும் புரிந்துகொள்ளத்தக்கதே.

அரு =  அரிய.
அண் =   அண்முதல், அடைதல்.
அரு+ அண் =  அரண்.

காவலுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அரியவை. எங்கும் கிட்டாதவை.  எனவேதான் “ அரு” என்ற என்ற சொல்லில் தொடங்கியது. அரு என்ற சொல்லும் மேலை மொழிகளில் சென்றுள்ளது.  இறுதியில் “ரேர்”   rare  என்று ஆங்கிலம் அதை வாங்கிக்கொண்ட்து. ஒரு பழைய மொழியிலிருந்து சொற்களை எடுத்துப்பயன்படுத்துவது இயல்பே.  அதைச் சுட்டிக்காட்டும்போது பெருமைபேசி ஏற்காமையே அறியாமை ஆகும்.









அடிக்குறிப்புகள்:


1.      (நோடு = காண்(தல்) .  நோடு> நோட்டு;  பாடு > பாட்டு போல ). நோட்டா என்ற இலத்தீனிலிருந்து நோட் என்ற ஆங்கிலம் வந்த்தெனில்,  நோட்டா தமிழ்த் திரிபு என்று உணர்க.



புதன், 30 ஆகஸ்ட், 2017

தமிழ்ச் செய்தித் தாள்கள் --



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா
டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் 
செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் 
யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் 
தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் 
செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  
வாங்கிப் பார்க்க!
மணிக்குடத்துள் யாவினையும் திணிக்கினது 
போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் 
யாவும் உண்மை 

அரும்பொருள்:

ஆக்கும் செய்தி -  வெளியிடும் செய்தி;
திரக்கிடினும் -  தேடினாலும்;
யாண்டும் - எங்கேயும்
உடைப்பன சேர்த்து ஆக்கம் -  பிரிந்தவற்றைச் சேர்த்து அமைத்தல்;
கடுகி = விரைந்து;
திணிக்கின்  = உள் வைத்தால்;
பன்மை - பலவும் இருத்தல்
மனமகழ்க்கும் -  மனம் அகழ்க்கும்;  மனத்தைத்  தோண்டும்;
செயும் - செய்யும்.

சதி என்ற சொல்.



கீழறுப்பு -   சதிநாசம்.

இந்த இரண்டும் கூட்டுச் சொற்கள்.  ஒவ்வொன்றிலும் இருசொற்கள் உள்ளன.   கீழ் என்பது ஒரு சொல். அறுப்பு என்பது ஒரு சொல்.  இவை இரண்டும் தனித்தனியாக வரும்போது அவற்றின் பொருள் வேறுவேறு.    ஒன்றாக இணைகையில் அவை குறிப்பன வேறு பொருள்.  உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர் முதலானோர் இரு சொற்களும் ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்றன என்பர்.  இங்கு நீர்மை என்ற சொல், தன்மை என்பதினும் பொருள் மிகப் பொதிந்தது ஆகும்.   நீர் கலந்துவிட்டால், எது எந்தக் கோப்பையிலிருந்து ஊற்றியது என்று தெரியாத வண்ணம் கலந்துவிடுகின்றது. இரண்டு “தான்”கள் ஒன்றாகும்போது அவை இரண்டறக் கலந்துவிடுவதில்லை.  எனவே  தானிலிருந்து வந்த “தன்” > தன்மை என்ற சொல்லினும் நீர்மை என்ற சொல்லில் பொருள் தெளிகிறது. நன்கு தெரிகிறது.

கரையான்கள் கீழிருந்து அறுப்பவை.  அவை மரக்கட்டையை இரவில் அறுக்கும்போது (அரித்து உண்கையில் ) அதன் ஒலியைக் கேட்கமுடிகிறது.   கட்டையின் மேற்பக்கம் பார்த்தால் தெரிவதில்லை. கட்டை அழகாகவே இருக்கிறது.  அதிகம் அறுத்து உண்டபின்  தெரிந்து என் செய்வது. கட்டையை மாற்றவேண்டி வந்துவிடும்.   ஆகவே கீழறுப்பு என்ற சொல் நல்ல பொருண்மையைக் காட்டுகிறது.  கீழறுப்பு நடவடிக்கை என்பது கரையானின் செயலை ஒத்தது.  இது மொழிபெயர்ப்புச் சொல்லா என்று தெரியவில்லை.

It may have been translated from  the word "subversion". 

சதிநாசம் என்பதும் ஏறத்தாழ இதே போன்ற நடவடிக்கையைக்  காட்டுகின்றது.   சதி என்பது அழிவு, வஞ்சனை மற்றும் துரோகம் என்பன - இப்போது வழங்கிவரும் ஒருபொருட் சொற்கள்.  இப்போது சதி என்ற சொல்லை ஆய்வு செய்யலாம். 

எடுத்துக்காட்டாக முதலில் சவம் என்னும் சொல் மற்றும் தொடர்புடைய பிற காணலாம்.

சாவு +  அம் = சவம்.   சா என்பதே வினையாதலின் இதைச் சா + அம் = சவம் என்று காட்டவேண்டும்.  விளக்கத்தின்பொருட்டு வு விகுதி கூட்டப்பெற்றே முன் இடுகைகளில் காட்டப்பெற்றுள்ளது.
 
இதில் கவனிக்கவேண்டுவது,  சா என்ற நெடில் ச என்று குறிலாகிச் சொல் அமைகிறது.   சில சொற்கள் இப்படி அமையும்.

இன்னொருவனை சாகும்படி வெறுப்புரைத்தல்,  சா > சாபித்தல் > சபித்தல் 1 என்று குறுகும்.  சாதல் மட்டுமின்றி  ஏனைத் துயர்களையும்  அடைக என்று ஏசுதலும் பின்னர் இச்சொல்லில் உட்பட்டுப் பொருள் விரிவுற்றது.   
இதுபோன்று அமைந்ததே சதி என்பதும்.

வினைச்சொல் :  சாய் என்பது.
சாய் >  சாய்தி > சதி என்று அமைந்தது.  முதல் (எழுத்து ) குறுகி
யகர  ஒற்றும் மறைந்தது.   சாய்தி >  சய்தி > சதி என்றும் காட்டலாம்.  செய்தி என்பது  சேதி என்று வந்தது. யகர ஒற்று மறைந்தது.  முதல் நீண்டது.
கெடுத்துச் சாய்ப்பது என்பது சொல்லமைப்புப் பொருள்.. 


-----------------------------
சாவித்தல் என்பர் ஆசிரியர் சிலர்.  சாவித்தல் > சவித்தல் > சபித்தல்.  வ- ப திரிபும் இதில் வருகிறது. 

This post was lost and recovered.  Hence it will be published first to remote -  save and edited later. 

Pl note that either hackers or the autocorrect feature has supplied too many dots in places where they were originally not there. We have corrected them  If it recurs we shall check but feel free to inform us through the comments column.  We shall be grateful.
This also applies to other posts. tq.