வியாழன், 2 பிப்ரவரி, 2017

பேதி not Bethi. Just pEthi.

இது எந்த மொழிச்சொல்?

கழிச்சலுக்கு ஒரு சொல் படைத்துக்கொண்டிருந்தபோது, கழி என்பதிலிருந்து ஒரு சொல் படைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள்.
அப்படி அமைந்திருந்தால் கழி+தி = கழித்தி > கஷ்தி என்று ஒன்றை
அமைத்திருக்கலாம்.

கழுத்தூறி என்பதிலிருந்து கஸ்தூரி என்று புனைந்ததுபோல்.

பெய்தல் என்பது அதற்கு ஈடான சொல்தான்.  மழை பெய்தல். மூத்திரம்
பெய்தல் என்றெல்லாம் வழக்குகள் உள.

மேலும் மலையாள நாட்டில் தூறுதல் (மழை தூறுதல்) என்பது
தூறுதல் (மலம் கழித்தல்) என்றும் வழங்குகிறதே!

ஆகவே பெய்தல் என்பதிலிருந்தே கழிச்சலுக்குச் சொல் அமைப்பதென்று தீர்மானம் ஆனது.

பெய் > பெய்தி > பேதி.

செய் > செய்தி > சேதி போலும் அமைந்தது.

தமிழ்தான். வேறு விளக்கெண்ணெய் இருப்பதாக உம் பேராசிரியன்
புருட்டா விட்டால் ................

அற்புதம்....how derived.

அற்புதம்  என்ற சொல் எப்படி அமைந்தது ?

இங்குக் கண்டு இன்புறுக .

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_18.html


இன்னும் அழிபடாமல் இருக்கிறது. 

ஜெட்லி நிதியமைச்சர் தம்மில் மேலோன்


வீடற்றார் தாம்பெறுவார் கோடி வீடு;
விடியலுக் கெழுந்ததுபா ரதமே நாடு:
ஓடற்ற குடிசைகளில் துன்பம் விஞ்சி
ஓய்ந்தயர்ந்த மக்களுக்கோர் நல்ல காலம்;
நீடுற்ற பலநன்மை நீங்கி டாத
நேர்த்தொண் டர் நிமிர்நெஞ்சர் மோடி பாதை
ஈடற்ற நன்முறையில்  ஏற்றும் ஜெட்லி
இவ்வுலகில் நிதியமைச்சர் தம்மில் மேலோன்


மோடி உறுதி

பெருமைக்  குரித்தான பண்பாடிதே----  அறிந்து
பெருமிதம் கொள்கிறேன் மோடிசொன்னார்.
அருமை அருமையே பாராட்டினார் --- தமிழ்
அரசுடன் கூடல்  செயலிலென்றார்.
உறுதுணை  யாமினித் திட்டங்களில் ---நிற்பேன்
ஒன்றாய்  வளர்ந்திடும் இட்டங்களில்;
உறுதியே மாநிலம் மேல்வளரும் --- இனிக்
குறிதவ றாதெனக் கூறிவைத்தார்.