ஞாயிறு, 19 மே, 2024

கடவுள், பாசம், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. ( தாயுமானவர் )

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் 

வெகுதூரமே

.......

பாசாடு  அவிக்குளே செல்லா  தவர்க்கருள்

பழுத்தொழுகு தேவதருவே

,,,,,

பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும்

பரிபூரணானந்தமே.


சிலவரிகள் விடப்பட்டன.


தாயுமான சுவாமிகள்.


சுவாமிகட்கு எங்கு பார்த்தாலும் கடவுள் பரிபூரணானந்தமாகத் தெரிகிறார்.

இன்னொருவருக்குக் கடவுள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.  இதன் 

பொருள் ?  கடவுள் தெரியவில்லை என்றால் அது 

பார்ப்பவனின் கோளாறுதான்.  அது கண்ணிலும் நெஞ்சிலும் உள்ள கோளாறு. 


தெரியாதவனிடம் கேட்டால் அவன் அவரைக் கண்டுபிடித்துச் சொல்ல 

முடியாது.

பாசம் என்னும் நெருப்புக்குள்  (அவிபட்டுக் கொண்டிருந்தால் )  இருந்தால் அவனுக்குக் கடவுள் தெரியமாட்டார்.

நெருப்புக்குள் எரிந்துகொண் டிருப்பவனுக்கு நெருப்பு மட்டுமே தெரியும்.

அவர்(கடவுள் )  எங்கிருந்தும் நீங்கியதே இல்லையே. என்று தாயுமானவர் காட்டுகிறார்.( எங்கும் இருப்பவரைக் கண்டுகொள்ள முடியவில்லை என்றால் அது உனது கோளாறு தான் ).

சனி, 18 மே, 2024

பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் ( ஒரு சாதியினர்)

 பந்தோபாத்யாய  அல்லது பண்ணில் தோய்ந்த வாத்தியார்கள் 

 இது ஒரு சாதியினர் ஆவர்.  இந்த வடபெயரின் தமிழ்,   பண்தோய் என்பதுதான், இவர்கள் பண்டை நாட்களில் பாடித் திரிந்தவர்கள். பண் என்றால் பாட்டில். அதில் தோய்ந்திருந்தவர்கள்.  பாணர் வீடு வீடாய்ப் போய் பாடலைப் பாடி வீட்டிலுள்ள பெண்ணுக்கும் அவளைச் சில காரணங்களால் பிரிந்து சென்றுவிட்ட தலைவனுக்கும் இடையில் பிணக்கைத் தீர்த்துவைக்கவோ திருமண முயற்சிகட்கு உந்துததல் கொடுத்து உறவை உயிர்ப்பிக்கவோ முயலுவர்.இவர்கள்  செய்துவைத்த ஒற்றுமை முய₹சிகளை இறையனார் அகப்பொருள் என்னும் நூலிலோ அன்றி ஏனைச் சங்க இலக்கியப் பாடல்களிலோ காணலாகும்.

Bandyopadhyay [ பண்தோய்வாத்தியாய( ர் )

பந்தோ என்று திரிந்துள்ள வடக்குமொழி வழக்கு  "பண்தோய்"  என்பதுதான். பண்ணில் அல்லது பாடலில் தோய்ந்து வாழ்தல்.  வாய்மொழியாகப் பாடித் திரிவதைத் தவிரப் பழங்காலத்தவர்க்கு  வழி வேறில்லை. வாய்த்தி>  வாத்தி> வாத்தியார்கள் என்று அவர்கள் குறிக்கப்பட்டனர். இவ்வாறு நாட்டில் திரிந்தவர்கள் பலராதலால், அதுவே ஒரு தொழிலாகி, அதைச் செய்தவர்கள் வாத்தியார்(வாத்தியாய)  என்றாகிவிட்டனர். வாய்ப்பாடகர்ளும் வாய்த்தி  ஆர்களே.  ஆர்கள் என்றால் அவர்கள் என்பதுதான். இவர்களெல்லாம் ஒரு சாதி ஆனார்கள்.  சாதி என்பது தொழிற்சார்பினர் என்பதுதான். சார்> சார்தி> சாதி> ஜாதி.  இவர்கள் ஒவ்வொரு கூட்டத்திற் பிறந்திருந்த படியால்,  சார்(தல்)> சா> ஜா என்ற சொல் உண்டாகி அது பிறத்தல் என்று பொருள்படும் சொல்லைப்  பிறப்ப்பித்தது.  தொல்காப்பியத்தில்  சாதி என்பது நீர்வாழ் உயிரினங்களுக்கே வழங்கியது.  பின்னரே அது மனிதர்களுக்கு உதவும் சொல்லானது. இஃது பிற வழக்கு ஆகும்.  மாறிவழங்குதல்.

இது பாணர் அல்லது பாணர்ஜி  என்றும் வரும். இதன் தமிழ் வடிவம் பாணனார் என்பதுதான். பாணர்ஜி என்பதும் பந்தோவாத்தியார் என்பதும் ஒரு பொருளுடையவை.

இவர்கள் பாக்களால், பாடலால், சிறந்தோங்கிய சீருடையார்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





வெள்ளி, 17 மே, 2024

நாதன், நாமம் என்பவை

 இறைவனைச் சொற்றுணை வேதியன் என்பதால்,  அவன் நாமத்தின் இருப்பிடம் நம் நாவினால் செய்யும் ஒலியாகிய அவன் பெயரை ஒலிப்பதே  ஆகும்.  இவ்வாறு நாவொலி பெறுபவை  நாதன், நாமம், நமச்சிவாயம் என்பனதாம்.

பாடல்: திருநாவுக்கரசர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(கல்+ தூண் > கற்றுண் என்று குறுகியது எதுகைநோக்கியது.)


சொல்லுக்குத் துணைவருவது நாவு. அதிலிருந்து  நா+இம்+ அம் > நாமம்.  இம் என்பதில் இகரம் கெட்டு மகர ஒற்று மட்டும் நிற்கும்.  அ, உ மற்றும் இ என்பவற்றிலிருந்து அம், இம் மற்றும் உம்.  இவை அன், இன், உன் என்றும் திரிந்து சொற்களில் இடைநிலைகளாக வரும்.    உன் ( உனது) என்ற முன்னிலைத் தொடர்பான உன்-ஐ இந்த இடைநிலையினின்று தனியாய்ப்  பிரித்து அறிந்துகொள்ளவேண்டும்.  அது குழப்பம் ஏற்பாடாமல் காத்தற்கு.

ஆதலின் நாமம், நாதன் என்பவை தமிழிலும் அவற்றின் பொருளைத் தருவனவாம்..

நா+ த் + அன் >  நாதன்.

இதை நா+ தன் எனினும் இழுக்கில்லை. இங்கு இது, து, த் என்பன சொல்லாக்க இடைநிலைகள்.  அதாவது சொல்லமைக்கும் உதவி ஒலிகள்.

நா+ ம் + அம்>  நாமம்.

ஆனால் நா+ மம் என்று விளக்குவதைத் தவிர்த்து,  நா+ ம் + அம் என்றே விளக்குக.

இது என்பதே த்  என்று குறுகி ஏற்பட்டது  எனினும் நா + இது + அன் என்று விரிக்கவேண்டியதுமில்லை. சில வடிவங்கள் திரிந்தபின் உள்ளபடி காட்டின் நலம். சில திரிதலின்முன் உள்ளவாறு காட்டினும் ஏற்புடையவாகும்.

எப்படி விளக்கினால் ஒவ்வொன்றையும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம் என்பதே குறிக்கோள்..  அன்+ அம் என்பதை அனம் என்று காட்டுவதுபோன்றதே இது  .  அனம் என்பது இங்கு இடைச்சொல்.  அனம் என்று ஒரு தனிச்சொல் ( பெயர்ச்சொல்) இல்லை.

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html   

நாதன் நாமம் முதலியவை

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_6.html

சில சோதிடச் சொற்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்