வெள்ளி, 30 ஜனவரி, 2026

சமர்ப்பித்தல் என்பது.

 சமர்ப்பித்தல் என்ற சொல் எவ்வாறு அறிந்துகொள்வது.

அமைத்தல் என்ற சொல்லின் அடியுடன்,   அருமை குறிக்கும் அர் என்ற அடிச்சொல்லும் இனைந்திருப்பதுதான் அமர்(தல்) என்ற சொல்.  அர்> அரு> அருமை, அரிய, அரிது என்பவெல்லாம் உண்டாயின.  அர் என்ற சொல் உயர்ந்தோருக்குரிய பன்மை விகுதியாகவும் வழங்கிவருகிறது. தகுதியான முறையில் ஓரிடத்திருத்தலைத்தான் அமர்தல் என் கிறோம்.

அம் > அமை> அமைதல்.

அம்>  அம்மை> அம்மா( விளிவடிவம்).

அம்> அமிழ்.  அமிழும் போது பொருள் கீழ்நோக்கி இறங்குகிறது.    அம் > அமர்: அமரும்போது நிற்பவன் கீழ் நோக்கி உடலைக் கொண்டுபோய் உட்காருகிறான். அமையும்போது நன் கு இருப்புக்கொள்வதாக வரும் போது, அமைந்தது என்று சொல்கிறோம்.  அம் என்பதுடன் ஐ என்ற உயர்வு குறிக்கும் பழைய அடிச்ச்சொல்லும் சேர்ந்து வருவதை உணர்ந்துகொள்க.

அமர்தல் என்ற சொல்லில் அம், அர் என்ற பழைய அடிகள் உள பண்.  அமர்ந்தால், உடல் தரைக்கு அருகில் செல்கிறது.  ஆகவே தரைக்கும் தலைக்கும் உள்ள இடம் குறுக்கமடைகிறது.   அரு> அருகுதல் என்பது குறைதலைக் குறிக்கும், குறுக்கத்தைக் குறிக்கும்.  ஆணவமுதலிய கேடுகள் குறைவதும்  இதில் குறிப்பு உள்ளது. உட்கார் என்ற சொல்லிலும்  ஆர் என்பதும்  அரு> ஆர் என்று திரிந்து அமைந்ததே.   உட்கு என்பது உள்+கு என்பதுதான். நிலம்நோக்கி உடல் செல்வது உட்செல்வது போன்றதே.  உள்+ கு  என்பது இக்கருத்தே. இதிலிருந்து அமர் என்பதில் வரும் அர் என்பதற்கும்  உட்கார் என்பதில் வரும் ஆருக்கும் உள்ள உறவினை நல்லபடி அறிந்தின்புறலாம்.

அமர் என்ற சொல்லே சமர் என்றபடி வருகிறது.    அமணர்- சமணர் என்பதுபோல் வரும் திரிபே இது.  சமர்> சமர்ப்பி என்பது,  ஒன்றைப் பெரியோனின் இடத்தில்  அமரும்படி  செய்வதுதான்.  அதாவது இயல்பான மொழியில் சொல்வதானால்  அமர்விப்பது.  இருப்பிப்பது.  இவ்வாறு அமைந்த சொல்தான்  சமர்ப்பித்தல் என்பதாகும்.

சமர்ப்பித்தல் என்பது அருமையான தமிழ்ச்சொல் ஆகும். இந்த  உயர்வான வழக்கில் இது பயன்பாடு காணும் சொல்லாய் இருப்பதால்,  இது ஒரு அரசவைச் சொல் ஆகும்.  பண்டை அரசவைச் சொற்கள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்வதற்கில்லை.  அதற்கு இன்னும் ஆய்வுகள் முடுக்கிவிடப்படுதல் வேண்டும்.

இச்சொல் சமகதம் அல்லது சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது.  சமஸ்கிருதம் என்ற தமிழுக்குச் சமமான ஒலிகளையுடைய மொழி என்பது பொருள். ஒலிமேம்பாடு என்று கருதாமல் அடிப்படை ஒலிகளை மட்டும் கொண்டால்  சம ஒலி மொழிதான் சமஸ்கிருதம்.  சம ஒலி என்பது பெரும்பான்மை பற்றி வந்த பெயர். எல்லாம் ஒன்றாக இருந்தால் அது வேறு மொழியாக இருக்காது.  ஆகவே வேறுபாடுகள் இருக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: