காரணம் இல்லாமல் என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக என்பர்.
ஒரு காரணம் என்பது எப்போதும் மனத்தில் இருப்பது. அந்தக் காரணத்தை, காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும். நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.
இந்தச் சொல்லில் மாற்று என்பது மாத்து என்று வந்தது, மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.
அகத்து - உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு, மாத்து = மாற்றமாக ( நடந்தது என்பது_.
அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக