அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.
பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள் அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து சிறத்தலாலேதாம்.
தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம் ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.
அதி + இசை(வு) + அம் > அதி + இசை+ அம் > அதிசயம் ( திரிபுச்சொல்).
அதி + சை + அம் > அதிசயம் ஆகும்.
அதி இசை என்பதில் உள்ள இகரம் ஒழிந்தது.
சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.
அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான். அது இகத்தல் என்றால் அது மீறுதல் அல்லது கூடுவது. மிகுதியாவது. அது இக > அதிக.
இது குறைச்சொல்லாய் அதி என்று முன்னொட்டாகும். சொற்களிலும் வரும்.
தமிழ் இயன் மொழி. மிக்கத் திரிசொற்களை சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன.
இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான். தனித்தமிழ் இனிமை மேலோங்கும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக