வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஆத்திகம் - வரையறவு defining...

  ஆத்திகம்* என்ற சொல்லுக்குப் பல்வேறு வரையறவுகளை( definition) க் கூறி " ~~* என்றால் என்ன?"  என்று விளக்கப் பலர் முற்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு வரையறவும் எந்தக் கோணத்திலிருந்து யாருக்காக யாரால் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டே,  அது சொல்லமைப்பில்  பொருந்துகிறதா என்று முடிவு செய்யவேண்டும். மதுரையிலிருந்து மானா மதுரைக்குப் பல வண்டிகள் போகின்றன.  எனினும் நீங்கள் அங்கு போகவேண்டின், அவ்வண்டிகளுள் ஒன்றுதான் உங்களுக்கு அமையும். எல்லா வண்டிகளும் உங்களுக்குப் பொருந்தாமை போலவேதான். ஆனால் எந்த வண்டியும் பிசகுபடுவதில்லை. எல்லாம் நல்ல வண்டிகள் தாமே!  அதுபோலவே   நாம் எங்காவது எச்சொல்லுக்கும் வரையறவு முன்வைத்திருந்தால்,  அது பெரும்பாலும் சொல்லமைப்பு என்பதைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது என்பது நேயர்கள் நன்கு அறிந்ததே ஆகும்.  சிவஞானபோத உரையில்  கூறியிருந்தாலலும்  அது இங்கு இதற்கு விதிவிலக்காகலாம்.

இவற்றையும் வாசித்தறிந்து கொள்ளுங்கள்:

ஆத்திகம்   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_24.html

ஆஸ்திகம் https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

இனி இன்னொரு வகையிலும் இது விரித்துரைக்கப்படலாம்.

அகத்து   ( அகம் + து )  என்பது அகத்து என்று வந்து பின் ஆத்து என்று திரியும். எடுத்துக்காட்டு:  அகத்துக்காரி >  ஆத்துக்காரி.    அகத்திலே >  ஆத்திலே.  (வீட்டிலே).

இங்கு + அம் என்பது,  இகு+ அம் > இகம் என்று குறுகும்.  இதன் பொருள்: இங்குள்ளது, இவ்வுலகம்.  இது வேறு வகைகளில் பொருளுரைக்கப் படுவதுமுண்டு.  அதனை ஈண்டு கவனித்தல் வேண்டியதில்லை.  பழைய இடுகைகளில் அவற்றைக் கண்டுகொள்க.

ஆத்திகம் எனின்,  அகத்து இறைப்பற்று எண்ணங்களையும் நிகழ்வுகளையும் எவ்வாறு இங்கு முறைப்படுத்தி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய நெறிமுறைகள் என்றும் கூறி விளக்கலாம்.  அவ்வாறு விளக்கினும் அழகாகவே வருகின்றது.  

அகத்து >  ஆத்து.

இங்கு அம் >  இகு அம் > இகம்.

எனவே,  ஆத்து இகம் > ஆத்திகம்

இது ஒரு பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.

சில விளக்கங்கள் சிற்றளவில் இணைக்கப்பட்டன. 



The Covid situation Singapore

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


செப்டம்பர் 23, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 163 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 97.9%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 22 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%


செப்டம்பர் 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 1,504 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh230921 




[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


வீட்டில் குணமடைதல் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 😷   


அண்மையில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு, வீட்டில் குணமடைதல் வழக்கமான பராமரிப்பு முறையாக உள்ளது . 


🔗 பரவலான கேள்விகள்: go.gov.sg/faq-24Sep-tl


1️⃣ யார் தகுதிபெறலாம்? 

2️⃣ PCR பரிசோதனையின் முடிவில் கிருமித்தொற்று இருப்பது உறுதி எனத் தெரியவந்துள்ளது. ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான் என்ன செய்வது?

3️⃣ வீட்டில் குணமடைதலின்போது எனக்கு அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

4️⃣ நானும் என் குடும்பத்தினரும் வெளியே செல்ல முடியாதெனில் மளிகைப் பொருட்களையோ மருந்துகளையோ எவ்வாறு பெறுவது?

5️⃣ உணவு பெறுதல், துணிமணி மாற்றுதல் ஆகியவற்றுக்கான தேவை ஏற்பட்டால் என் குடும்பத்தை நான் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?


📱 ஆக அண்மைத் தகவல்களைப் பெற, Gov.sg வாட்ஸ்ஆப் தகவல் இயலியைப் பயன்படுத்தவும்


🔹 சுகாதார அபாய எச்சரிக்கை ➡️ “631” எனப் பதில் அனுப்பவும்

🔹 வீட்டில் குணமடைதல், தடைக்காப்பு நெறிமுறை ➡️ “66” எனப் பதில் அனுப்பவும்

மூதாதையர் என்பது தமிழா?

 [இப்போது சிங்கப்பூர் மணி 3.47 மாலை.   மலேசிய நேரமும் இதுவே. இந்த இடுகை இட்டபின் உங்களுக்கு உங்கள் ஊரின் நேரம் தெரிவிக்கப்படுதல் கூடும்.  அது உங்கள் கணினி காட்டும் நேரம்.  அது எமக்குத் தெரியாது.] 

நாமெடுத்துக்கொண்ட தலைப்பு மேல் குறித்தபடி மூதாதை என்ற சொல்லாகும். 

மூதாதை என்பதில் தாதை என்பது தாதா அல்லது தாத்தா என்ற சொல் ,   மூ என்பதோடு சேர்க்கப்பட்டுள்ளது.  மூ என்பது மூப்புக் காட்டுவது.  ஆகவே இதைத் தாத்தாவுக்கு  தலைமுறைகள்  முன்னுள்ள தாத்தாமார் என்று  எடுத்துக்கொள்ளவேண்டும்.  நம் கண்ணுக்குத் தெரிந்த தாத்தாவினும் தெரியாத தாத்தாக்கள் பலர்.  அவர்களை நாம் அறியோம்.  நாம் அறிய முடிந்தது அவ்வாளவுதான்.  நம் உடலிலுள்ள அணுக்களுக்கும் அணுத்திரள்களுக்கும்  [ atoms, molecules ] இதுபற்றித் தெரிந்திருந்தாலும் நாம் இதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தாத்தா என்பது ஆண்முன்னோரைக் குறித்தாலும்,  இதுபோலும் வாக்கியங்கள் சொற்றொடர்களில் ஆண் என்பது  பொருள்நீட்சி காரணமாகப் பெண்முன்னோரையும் உளப்படுத்தும்.

தாத்தா >  தாதா>  தாதா+ஐ >  தாதை,   தாதை+ அர் >  தாதையர்.
தாதை > தாதையர்,  தாதை > தாதா> தாத்தா   எனினுமாம் 
இவற்றை எப்படித் திருப்பிப் போட்டுக் காட்டினும், அடிச்சொல் தை என்பதே.
தம்+ தை > தந்தை,  எம் + தை > எந்தை,   நும்  + தை > நுந்தை  என்றெல்லாம் வரும்.

தை >  தா என்பது விளிவடிவம்.  தாதா என்பது இரு விளிகள் கோவை.
தந்தாய என்பது தந்தை ஆய என்பதன் ஒட்டு.
தந்தை  -  தம் + தை > தம் +  த் + ஆய > தந்தாய.   இங்கு வந்த த் என்பது  த்+ஐ என்பவற்றில் ஐ கெட்டது.

தாதை என்பது தந்தைக்குத் தந்தை.,  அதாவது தை தை.   அல்லது தைக்குத் தை.  (  அதாவது தந்தைக்குத் தந்தை).

அர் என்ற பன்மை விகுதியாலும்,  மூ என்ற மூப்புணர்த்தும் முன்னொட்டினாலும் இது   ஆண்முன்னோர் என்று பொருள்பட்டது.

தந்தையர் என்ற சொல்லும் இதுபோல்வதே.  இன்று இதை "முன்னோர்" என்றே சொல்லி நிறுத்திவிடலாம். எல்லாம் தமிழ்தான்.

அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்