வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அந்தோ என்ற சொல்.

இன்று  அந்தோ என்ற சொல்லை ஆய்வு செய்வோம் வருக.

அந்தோ என்பது தமிழில் பயின்று வழங்கும்  சொல்லாகும். இந்தப் படல் வரிகளைப் பாருங்கள்.

"அந்தோ என் ஆவியெல்லாம்
கொள்ளை கொண்டாரே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன்"

இன்னொரு பாடல்:

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ---  சுப்ரமண்ய
சுவாமி  உனைமறந்தார்  ------ அந்தோ!"

அந்தோ என்பதற்கு  ஐயோ  எனபதாகப் பொருள்  கூறுவதுண்டு.

ஐயோ அந்தோ அம்மோ அக்கோ அண்ணோ என்பவெல்லாம் மனம் மிக இரங்கி ஒலியெழுப்ப்புதலே.

In English "Alas"  is of the same kind of exclamation. Another:  OMG!

அம்  என்பது  அம்மா என்பதன்  முன் பகுதி.

தோ என்ற  விளிவடிவின் எழுவாய் வடிவம்  பழைய "தை"  என்பதாகும்.

இந்தச் சொல்லுக்கு  தந்தை என்பது பொருள்.

தம் + தை  =  தந்தை.
எம்+ தை =   எந்தை.
நும் + தை=   நுந்தை.

தம் + அப்பன் =  தமப்பன்  திரிபு:  தகப்பன்.
தம் +  ஆய்=  தாய். 

தந்தை  >  தந்தாய்!
தந்தை  >  தந்தோ.

தம். எம்.  நும்  இவற்றை விலக்கி உணர்க.

தை > தா!    இது விளிவடிவம்.

தை >  தோ!   இது ஓகாரம் வந்த விளி.


அம்+ தோ =  அந்தோ:   அம்மையே அப்பனே என்று இருவரையும் விளித்தவாறு.

அன் +  தோ  =  அந்தோ எனினுமாம்.    அன் என்பது அன்னை என்பதன் பகுதி.

தமிழ்தான். அறிக.
 

வியாழன், 12 செப்டம்பர், 2019

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சகஜம் சகசம் என்பவை.

சகசம் என்ற சொல் உலவழக்கில் பெருவரவிற்று என்பதை அறிவீர்களே.  இயற்கையில் நடப்பவையும் இயற்கையாய் நடப்பவையும் சகசமானவையாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.   நிலநடுக்கமென்பது  இயற்கையாய் இயற்கையில் நடப்பினும்  அது சகசம் அல்லது சகஜம் அன்று.

அடுத்து அடுத்து நடப்பதாயின் சகஜம் அல்லது சகசம் ஆய்விடும்.  ஆகவே எது சகசம் என்பதைத்  தீர்மானிப்பத்ற்குக்  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வீர்.

இவற்றுள் மூழ்கிவிடாமல் சொல்லைக் கவனிப்போம்.

வீட்டில் அம்மா சமையல் செய்வது சகசம்.


அகம் >  சகம். 

முன் இடுகைகளில்  விளக்கிய விதி இது.

அடு  - இதுவும் அஜு  என மாற்றக் கூடியதே.

இது எப்படி என்றால்  கடை > கட  .> கஜ எனற்பாலதை ஒத்ததே.

சக  +  அஜு  + அம் =  சகஜம்.
.
சக  + அச +   அம். =  சகசம்.
 
அடு -  அசு  -  அம்

>   (சக)  அச  அம்.

அதுவே  அது. வேற்றுமை யாது.?