இன்று அனுமான் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
அனு என்ற முன்னொட்டினை முதலில் அறிவது நலம்.
அனு என்பது அடுத்து நிற்பது என்னும் கருத்தினை உடைய
சொல். இது அணு> அணுகு > அணுகுதல் என்ற
சொல்லினோடு உறவுடைய சொல் ஆம். அணுகு என்ற
வினைச்சொல்லில் கு என்பது வினையாக்க விகுதி.
அணு என்பதே அடிச்சொல். அணு என்பதில் இறுதி உ.
ஒரு சொல்லாக்க விகுதியே. பளு என்ற சொல்லில் உ
நிற்பதுபோலவே இங்கு உள்ளது.
அணு > அணுகு > அணுகுதல்.
அணு = அனு.
அனு - அனுப ந்தம் ;
அனு - அனுசரணை.
அனு - அனுகூலம்.
அனு - அனுபவம்.
இவைபோன்ற பல சொற்களில் அனு என்பது
முன்னொட்டாக நின்றது.
மன் - மனிதன் என்பதன் அடிச்சொ.ல்
மன் - மான் - மான் தன் - மாந்தன்.
மன் - மன்+தி = மந்தி. தி - விகுதி.
இவற்றை இங்கு எடுத்துக்காட்டினோம். விளக்கம் பின்.
மற்றும் பழைய இடுகைகளிலும் காணலாம்.
அனு + மன்: அனுமன். அதாவது மனிதனுக்கு அடுத்த
நிலையினன் என்று பொருள். அனுமான் எனினும் அது .
மன் = மான் .
இது விரிந்து அனுமன் தன் > அனுமந்தன் என்றுமாகும்.
இவை முன் ( ஐந்து ஆண்டுகளின் முன் ) விளக்கம்பெற்ற
சொற்களே. அவற்றைப் பகைவர் அழித்தனர் என்று தெரிகிறது.
Will edit. Paragraphs could not be justified.
ர்