புத்தகம் என்ற சொல்லுக்கு நேரானதாக , ஆங்கிலத்தில் "புக்" எனப்படுகிறது.
புத்தகம் என்பதினும் பொத்தகம் என்பதே சரியானது என்று தமிழ் ஆர்வலர் கூறுவர்.
பொதி + அகம் = பொத்தகம் எனின் ஏடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட கட்டு என்று பொருளாகும். பொதி என்பது பொதிதல். உள் வைத்துக்
கட்டுதல். இதில் ஒரு இகரம் கெட்டது; பொதி < பொத்+ இ.
பொதி என்பது கட்டுச்சோறு என்றும் பொருள்படும்.
பொத் > பொது. ( பலர் ஒன்று சேர்தல், சேர்ந்திருத்தல்).
பொத் > பொதி. (கட்டு)
பொத் > பொத்+ அகம் = பொத்தகம், ஏட்டுக்கட்டு. கட்டேடு. கட்டோலை.
பொத்துதல் : இது கட்டுதல் என்றும் பொருள்.
பொத் என்பது ஒரு அடியன்று . விளக்கும்பொருட்டு , இவ்வடிவு
காட்டப்பட்டது.
புதை என்பது பேச்சில் பொ தை என்று வடிவு கொள்ளும். புதைப்பதும் ஒரு துளை செய்து. மண்கட்டுக்குள் ஒன்றை இடுவது ஆகும். இங்கு வரும் கட்டுப் பொருளைக் கவனிக்கவும் .
பொத்துதல் = கட்டுதல்.
பொத்து + அகம் எனினும் அதுவே ஆகும். = பொத்தகம் .
புத்தகம் எனின் புதிய அகம் ஆகும்!!
பொத்தகம் என்பதைச் சமஸ்கிருதம் புஸ்தகம் ஆக்கிற்று. அது பின் தமிழில்
புத்தகம் ஆனது.