புதன், 6 ஏப்ரல், 2016

Singapore: தானோடி வாடகை வண்டிகள் autonom. taxis

Autonomous taxis may soon be coming to Singapore

Hopefully during your next visit to Singapore, you can travel around in one of these taxis.

https://sg.news.yahoo.com/autonomous-taxis-may-soon-coming-191741073.html?nhp=1


தானோடி வாடகை வண்டிகள்!! 

சிவஞான போதம்: இறைவன் அன்னியம்.?

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.


இறைப் பற்று முதிர்ச்சி பெற்று புனிதம் அடைந்தவனுக்கு இறைவன்
அன்னியம் இல்லை என்கிறது சிவஞானம்.

தொடக்கத்தில் இறை அன்னியமாய்த் தோன்றும்.  ஆனால் பற்றுடையான்,  தாங்கருந்  தவம் மேற்கொண்டு செயல்பட  அத்தவம் இறைக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருக்கத்தினை  அவனுக்கு உணர்த்துகின்றது.  அதாவது, ஆன்மாவே சிவம்; சிவமே ஆன்மா என்று உணர்த்துகின்றது.  இதில் விழிப்புற்றோன்,  இரண்டன்மை அறிந்துகொண்டு சிவத்தை நோக்கிப் பயணிக்கின்றான்.

அத்வைதம்  என்பது இரண்டன்மை.  இறைக்கும் ஆன்மாவுக்கு மிடையில் பாகுபாடின்மை . அன்னியம் இன்மை என்றதும் இதையே ஆகும்

கழல் -   சிலம்பு.  இங்கு  கழல்  இறைவன் திருவடிகளைக்  குறித்து நின்றது.  ஆதலின் ஆகுபெயர். அரன்  = சிவம்.  சிவத்திற்கு  உருவும் பாலும் ( ஆண் பெண் என்னும் ....)  இன்மையினால் இஃது இங்குக்  கவிதை நயம் பொருந்தக் கூறப்படுகிறது. உருவக அணி . சிவத்துடன்  ஆன்மா ஒன்றிணையும் என்பதே பொருள் . வீரர்களும் கழலணிவர். பெண்களும் கழலணிவர்.  சிவன் அம்மையப்பன் ஆதலின்  இது பொருத்தமே.

கழல்-.. Anklet given as a token of honour to a warrior; வீரக்கழல். ஒண்பொறிக் கழற்கால் (பதிற் றுப்பத்து . 34, 2). 2. Anklet; சிலம்பு. அறைகழ லரு ளொலி . என்பர் பிறரும் .

இறுக்கமாக இல்லாமல் அணியப்படுதலால் கழல் என்ற பெயர் வந்தது. from: கழலுதல் become loose. .அகரவரிசைகள் தரும்பொருள் மேல் குறித்தோம்.

===================================================
குறிப்பு:  "கழல்வளை" என்பது வளையல்களைக் குறிக்கும்  Here the word kazal qualifies the word vaLai.  This is because vaLai is also an ornament which is loose enough to be comfortable at wear.

வீரகண்டாமணி  -  வீரத்தினறிகுறியாய்  அணியும் கழல்.


செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சி.போ. 8 : தவத்திற்கு ஓர் ஆசிரியன்

தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த....

------சிவ ஞான  போதம்  8. 

இது சிவஞான போதத்தின் எட்டாம் நூற்பாவினுடைய ஒரு வரியாகும்.

பற்றுடையோன் ஒருவன் சிவத்தை அடைந்து இன்புற முனைப்புடன் முயல்கின்றான். ஒரு சிறுவன் பெரிய மரத்தைச் சாய்க்க வெறுங்கைகளால் முயலுதல் போன்றதே இது. இமையத்தின் உச்சியைத் தொட ஓர் உதவியுமின்றி மலையேறுதல் போன்றதே இது.
எங்ஙனம் சாய்த்திட முடியும்?  எங்ஙனம் உச்சி தொடுதல் கூடும்?

அறியாதவனுக்கு ஒரு குரு வேண்டும். அவனுக்கு  வழிகாட்டுவதற்குத்தான்!  அந்தக் குரு இன்னொரு  அறிவனாக இருக்கலாம்.  இல்லையெனின். . அவன் எவ்வுதவியும் இல்லாவிடினும் தவத்தினில் ஈடுபடுதல் வேண்டும். உடனே ஈடுபட அத்துணை எளிதானதா அது?

அவன் தவமே அவனுக்கு முதல் குருவாகி அவனுக்கு உணர்த்துதல்
அரிதான ஒன்றே எனினும் அது இயலாத ஒன்றன்று.

தவம் என்பதுதான் யாது? உற்ற நோய் பொறுத்துக்கொள்ளுதல் ஒன்று.  எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை மற்றொன்று. இவைதாம்
தவத்தின் இரு படிகள் ஆம். இவை இரண்டும்  ஒருங்கு இயங்கும் படிகள்.  ஒரு படியைக் கடந்தால் தவம் பயில்வோனின் கடப்பாடு முடிந்துவிடுவதில்லை. அப் படியும் தொடர  அடுத்த படியும் வந்து
சேர்ந்துகொள்கிறது. இரண்டும் இயைந்ததே தவத்தினுரு என்பார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்.

இரண்டிலும்வெற்றி கண்டோன் தவத்தில் ஈடுபட்டு சிவத்தினில் மனத்தை நிலை நிறுத்த,அஃது அவனுக்கு சிவத்தைப் போதிக்கும் ஆசிரியனாகி விடுகிறது.

யாகத்தில் விலங்குகள் பலியிடப்படுதல் உண்டெனில்  அது தவத்தினோடு ஒருபடியில் நிற்றலுக்குத் தகவு உடையதன்று என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டும். தவமென்பது இறையுடன் தொடர்பு செயல் என்பது கண்டுகொள்க.

அத்தவமே  நன்கு இயற்றப்படின் அவனுக்கு உணர்த்தவல்லது அதுவாம் .