திங்கள், 28 மார்ச், 2016

புரு, பொரு என்ற சொல்லடிகள்

புல்லுதல்  அல்லது "புல்" என்பதொரு வேர்ச்சொல்யாம் வேர்ச்சொல் என்று குறிப்பது, சில பல அடிச்சொற்களைப் பிறப்பிக்க வல்ல தாய்ச்சொல்.

புல் என்பதிலிருந்து புரு, பொரு என்ற சொல்லடிகள் எழுந்தன.

புல் > பொரு.
புல் > புரு.

இந்த இரண்டை மட்டும் இன்று ஆய்வோம்பலவற்றையும் கொண்டுவந்தால் வாசிப்போரில் சிலர் குழப்பம் அடையக்கூடும்.

-து என்பது வினையாக்க விகுதியாகவும் வரும்.

பொரு > பொருந்து.
பொரு > பொருத்து (பிறவினை).

இன்னோர் உதாரணம்திருந்துதிருத்து என்பன.


புரு என்பதும் இங்ஙனமே ஒரு விகுதி பெறும்.  (டு)

புருபுருடு.

டு என்பது ஒரு சொல்லாக்க விகுதியே.   கரடுமுரடு, திருடு, வருடு

நெருடு என வினை பெயர்  இரண்டிலும் இது வரும்  சொற்கள் பலவாகும்.

புருடு என்பதன்மேல் அன் விகுதி ஏறி,    புருடன் ஆயிற்று.

பேச்சு வழக்கில் புரு> புருசு > புருசன் என்று அமைந்தது.

புருசன் / புருடன் >  புருஷ என்றானது.

புரு என்பது பொருந்து என்னும் பொருளது ஆதலின், புருடன் என்பவன்
பெண்ணுடன் பொருந்தி வாழ்பவன் என்று பொருள் தருவதாயிற்று
.

புரு> புருவு > புருவம்.

இச்சொல்லும் புரு என்பதினின்றே பிறந்ததாதலின், புருடன் கண்ணாகிய பெண்ணுடன் பொருந்திய புருவம் போன்றவன்  அவளைக் காப்பவன் என்ற பொருள் கொள்ளுதல் ஏற்புடைத்தே. அங்ஙனமாயின், கணவன் கண்ணாக இருந்த நிலை மாறி (எது முதலில் படைக்கப்பட்ட சொல் என்பது ஆய்தற்கு உரியது)  இச்சொல்லில் புருவமாக உணர்த்தப்பெறுகிறான் எனலாம்.  இது பெண்ணியத்துக்கு ஏற்ற கருத்து ஆகும்.

An error occurred and no preview and edit are possible  Will edit later

.

ஞாயிறு, 27 மார்ச், 2016

எண்ணெயும் ஆதரவும்

வெட்சித் திணையில் ஆகோள் என்பதும் ஒரு துறை.  ஆ+ கோள் = ஆகோள் ஆயிற்று. இங்கு வல்லெழுத்து மிகவில்லை.  இதேபோல்,  ஆதரவு  (ஆவினைக் கொடுத்து ஒருவனை ஆதரித்தல்),  ஆதாரம் ( ஆவினைத் தருதலாகிய அடிப்படைத் துணை நிற்றல் ) என்பவற்றிலும் மிகவில்லை.   இவற்றுள் இப்போது ஆவை மறந்துவிட்டோம்.  மறந்துபோதலும் நல்லதுதான். மொழியும் கருத்துகளும் வளர்ந்து வேறுபாடுறுங்காலை,  ஆக்களை மறந்து பொதுப் பொருளில் சொற்கள் வழங்குவனவாயின. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு வேண்டின், எண்ணெய் என்பதைக் கூறலாம். இது எள்+ நெய் என்பதன் திரிபு (புணர்ச்சியினால் வந்தது). என்றாலும் எள் தொடர்பு இல்லாத பல எண்ணெய்களைப் பார்க்கிறோம்.  ஈராக் ஓர் எண்ணெய் வள நாடு என்றால், அங்கு எள்ளிருக்கிறது என்பது அர்த்தமில்லை. சொல்லில் புகுந்துகொண்டிருக்கும் எள்ளுக்கு அதன் பொருள் மறைந்துவிட்டது. அது வெறும் சொல்லாக்கத் துணையாக நிற்கிறது.

எள்  மறந்து எண்ணெய் பெற்றோம்.

எண்ணெய் என்ற சொல்லுக்குப் பொருள் மாறிவிட்டதால், " நல்லெண்ணெய் " என்று நல் இணைத்துச் சொன்னால்தான், எள்ளின் பொருள் வருகின்றது.

எண்ணெய் என்பதைக் கொஞ்ச காலம் எண்ணை என்று எழுதிப்பார்த்தனர்.  ஆனால் தமிழ் வாத்தியார்கள் விடவில்லை. எண்ணை என்று ஒரு சொல்லே இல்லை என்று மறுத்தார்கள்.
நெய் ணெய்யாகி நிற்கவேண்டும் என்று அடம் பிடித்தனர். அதனால்
எண்ணெய் எண்ணை ஆக முடியாமற் கிடக்கிறது. புதிதாகத் தலையெடுத்த வடிவம் ஆட்சி பெற முடியவில்லை.

எண்ணெயும் ஆதரவும்

வெள்ளி, 25 மார்ச், 2016

பிருதுவி அல்லது பிரித்வி ஒரு தானமே

இதைப் பற்றிய ஆய்வின் ஒரு துளியை யாம் 2009ல் வெளியிட்டோம்,
அது நல்ல வேளையாக நுழையொற்றுக்களால்   spywares   ஒழிந்துவிடாது இன்னும் உள்ளது.  இங்கு சொடுக்கவும் .

பிருதுவி அல்லது பிரித்வி
http://sivamaalaa.blogspot.sg/2009/01/blog-post.html

இது தமிழர் அறிந்த சொல் எனினும் தமிழன்று என்னலாம்.  யாம் கூறவந்தது  இச்சொல்லின் அடி தமிழென்பதுதான்.

பேரரசு அமைத்துப் பெருவாழ்வு எண்ணிய தமிழன்,  அமைத்தான்  ஆனால்  பல சாதிகளாகி  உட்பகை உற்ற குடியாய்  ஆயிர ஆண்டுகட்கு முன்னரே ஒருவாறு வீழத் தொடங்கிவிட்டான்.  அவன் மேலெழாது பார்த்துக்கொண்டது அவன் அணைத்துக்கொண்ட பிரிவினைகள்.

சிறந்த மொழியையும் இலக்கியத்தையும் உடையவன் அவனது வீழ்ச்சியில் அவன் சொற்களை மற்றவர்கள் மேற்கொள்ளுதல், ஒரு தானமே ஆகும்.  இல்லை  அவன் சொற்கள் அவனே அறிந்திலன்;  எப்படித் தானமேன்பது !?