கடினப் பட்டு நடைமேற் கொண்டதால்
காலில் நல்ல வலி!
உடனே வெந்நீர் ஊற்றி உதவியும்
ஒழியா தயர்ந்த தொலி .
சொந்த மருந்துகள் செய்து தடவிட
சூழ் நிலை ஒப்பிட வில்லை .
சொந்தப் பாட்டியும் எந்தப் பாட்டியும்
சொல்லவும் அருகினில் இல்லை .
ஆங்கில மருத்துவர் கண்டேன் அன்புடன்
அவரென் கால்களைத் தடவி
வீங்கிட வில்லை வீணிலேன் கவலை
விந்தைக் களிம்பிது வென்றார்.
செருப்பினில் அழுக்கென்று சொல்லியும் கைபடச்
செம்மகன் கழற்றி விட்டும் ,
பொறுப்புடன் பிடித்து வழித்து வலிதனைப்
போக்கினார் முடிந்த மட்டும்
அப்புறம் தந்த களிம்பொன்று அதனையே...............
அன்பர்கள் நீவிர் கேட்பீர்.
இப்பொழு ததன்பெயர் இங்குரைப்பேன் தேய்க்க
எவ்வலிக் கினியும் தோற்பீர். ?
Name of Gel: Fastum.
This is not an ad.
Any other pl share.
காலில் நல்ல வலி!
உடனே வெந்நீர் ஊற்றி உதவியும்
ஒழியா தயர்ந்த தொலி .
சொந்த மருந்துகள் செய்து தடவிட
சூழ் நிலை ஒப்பிட வில்லை .
சொந்தப் பாட்டியும் எந்தப் பாட்டியும்
சொல்லவும் அருகினில் இல்லை .
ஆங்கில மருத்துவர் கண்டேன் அன்புடன்
அவரென் கால்களைத் தடவி
வீங்கிட வில்லை வீணிலேன் கவலை
விந்தைக் களிம்பிது வென்றார்.
செருப்பினில் அழுக்கென்று சொல்லியும் கைபடச்
செம்மகன் கழற்றி விட்டும் ,
பொறுப்புடன் பிடித்து வழித்து வலிதனைப்
போக்கினார் முடிந்த மட்டும்
அப்புறம் தந்த களிம்பொன்று அதனையே...............
அன்பர்கள் நீவிர் கேட்பீர்.
இப்பொழு ததன்பெயர் இங்குரைப்பேன் தேய்க்க
எவ்வலிக் கினியும் தோற்பீர். ?
Name of Gel: Fastum.
This is not an ad.
Any other pl share.