வியாழன், 27 ஆகஸ்ட், 2015

விரட்டினாலும் கேட்கவில்லை.

அடுத்த வீட்டு  நாய்தான்!  --- என்னுடன் 
அன்பும் பாசமும் உள்ள நாய்  ---  நான் 
 எடுத்து  வைத்த ஒவ்வோர்  அடியைபும் ---- அளவில் 
ஏறிய கவனத்துடன் கண்காணித்துக்கொண்டு ---- நடந்து 
தொடுத்த பாதையில் தொடர்ந்ததே!---- நான் 
துவளாமல் இரு கல் தொலைவு சென்று :


நீருக்கும் மின்சாரத்துக்கும் காசு கட்டி --- கொஞ்சம் 
நேரம் சென்றதும் நேராக வெளிவந்தேன் ;
யாருக்கும் தெரியாமல்,  வெளியில் நின்ற நாய் 
யாதோர்  ஒலியும் செய்யாமல் 

காணாமல் போனதுதான் கவலை 
காலையில் எழுந்து  
வேலைக்குச் செல்வோரைப் பார்த்துக் குலைக்க 
நாளைக்கு அந்த நாய்  இருக்காதோ!

வண்டி ஒட்டிக்கொண்டு போயிருந்தால் --  இத்தகைய 
வம்பொன்றும் வந்திருக்காதே!

ஒரு கல்லில் இரு மாங்காய்  என்றபடி 
உடற்பயிற்சியும் வேண்டும் ,
ஒரு வேலையும் நடக்கவேண்டும்  என்று நினைத்தால் 
பாவம் நாய் தொலைந்துவிட்டதே! 

என்னுடன் வராதே என்று விரட்டினாலும் 
கேட்கவில்லை......... என் செய்வது !

சாப்பாடு எங்கேயும் கிடைத்ததோ .என்னவோ.....

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

Deadlock notice

மட்டுறுத்தப் பட்ட குழும்புகளில் limited companies பங்கு தாரர்களிடையே  முரண்பாடுகள்  உண்டாகி  சிலவேளைகளில் யாது செய்வதென்பது  அறியாமல் திணறுதல் நிலை ஏற்படுவதுண்டு .  ஒரு பங்குதாரர்  ஆடு வாங்கலாம் என்றால் இன்னொருவர் முடியாது  குதிரைதான் வேண்டுமென்பார்   பிறகு ஆட்டு வியாபாரமும் நடவாது; குதிரை வியாபாரமும் நடவாது.

இத்தகைய நிலையில்  மேல்  தம் எண்ணத்தை செயல்படுத்த விழையும் பங்குதாரர்  ஓர்  அறிக்கை  வெளியிடுவார் , இந்த அறிக்கை  ஆங்கிலத்தில் deadklock notice அல்லது   முட்டுப்பாட்டு  அறிக்கை   ஆகும்  இவ்வளவு பணத்துக்கு நீங்கள் எம் பங்குகளை  இத்தனை  நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளலாம்.  இல்லையென்றால் யாம்  உங்கள் பங்குகளை வலிந்து மேற்கொள்வோம் என்பது போன்றிருக்கும் ,  வேறு முறைகளும் உள்ளன என்கிறார்கள்.

Deadlock notice என்பதை முட்டுப்பாடு அறிக்கை என்று மொழிபெயர்க்கலாம் என்பது எம் கருத்தாகும் 

White Skin: An Obsession

White Skin: A Chinese Obsession in China


Read this interesting discussion:

http://www.vagabondjourney.com/white-skin-a-chinese-obession/