மட்டுறுத்தப் பட்ட குழும்புகளில் limited companies பங்கு தாரர்களிடையே முரண்பாடுகள் உண்டாகி சிலவேளைகளில் யாது செய்வதென்பது அறியாமல் திணறுதல் நிலை ஏற்படுவதுண்டு . ஒரு பங்குதாரர் ஆடு வாங்கலாம் என்றால் இன்னொருவர் முடியாது குதிரைதான் வேண்டுமென்பார் பிறகு ஆட்டு வியாபாரமும் நடவாது; குதிரை வியாபாரமும் நடவாது.
இத்தகைய நிலையில் மேல் தம் எண்ணத்தை செயல்படுத்த விழையும் பங்குதாரர் ஓர் அறிக்கை வெளியிடுவார் , இந்த அறிக்கை ஆங்கிலத்தில் deadklock notice அல்லது முட்டுப்பாட்டு அறிக்கை ஆகும் இவ்வளவு பணத்துக்கு நீங்கள் எம் பங்குகளை இத்தனை நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் யாம் உங்கள் பங்குகளை வலிந்து மேற்கொள்வோம் என்பது போன்றிருக்கும் , வேறு முறைகளும் உள்ளன என்கிறார்கள்.
Deadlock notice என்பதை முட்டுப்பாடு அறிக்கை என்று மொழிபெயர்க்கலாம் என்பது எம் கருத்தாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக