வியாழன், 20 ஆகஸ்ட், 2015

Where more people eat

முதலில் பந்தி  என்ற சொல்லை  அணுகிவிட்டுப் பின் தொடர்புடைய சொற்களி ல் ஒன்றிரண்டை  நோக்குவோம்.

பலர் இருந்து உண்ணும் நிலையையே  பந்தி  என்று அழகாகச் சொல்கிறோம்.

பல் என்ற சொல் பல  என்பதைக் குறிக்கும்.  பல பேர்களென்று பொருள்.

பல்+தி >  பன்+தி >   பந்தி என்று அமைந்தது.  பலருக்கு உணவு பரிமாறுவது  ஓர் அறமும்  நற்செய்கையும் ஆகும். அதற்கேற்பச்
சொல்லிலும் மெல்லொலி தோன்றியது  அறியத்தக்கது.  பற்றி என்று வரவில்லை. சொல்லைமைத்தோருக்கு நல்ல மூளை என்பதை இது காட்டுகிறது.  பற்றி எனின் வேறு பொருள்கொண்ட சொல்லுடன் குழப்பம் ஆவதுடன் பொருளிலும் மாறுபாடுஏற்பட வாய்ப்புண்டு.

பல் +  தி >  பன்+ தி > பன்றி.This "pal" here means "tooth".         
பல் + தி > பன்+ தி >   பந்தி  pal here means many..
பல் + தி > பற்றி    இது "பற்று " என்பதன் அடிச்சொல். உறவு என்று பொருள் தரும்  "பந்து"  என்பதன் அடிச்சொல்லும் ஆகும். பந்து என்பது வடசொல் என்பர் .  பற்றி என்பது பத்தி > பக்தி என்பதன்  முந்துவடிவமும் ஆம் . .

பல் என்ற வடிவமும் பல்வேறு பொருண்மைகள் உடையது.

பந்தி  என்பதில்  தி என்பது விகுதி.  தின்னற் கருத்துடைய தின் என்ற சொல்லுக்கும் முதலெழுத்தாவது கவனிக்க.

சொல் அமைத்தால் இப்படிப் பல்வேறு பொருத்தமும் கொண்டு அமையும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது புலவோர்தம் கடமை.

பல்தின்  > பன் தின்  > பந்தின்  >  பந்தி  (னகர  ஒற்று மறைவு )
cf:   தம்பின் >  தம்பி  ( னகர  ஒற்று மறைவு)

எனினும்  ஆகும் . 

கருத்துகள் இல்லை: