ஈனா ரபானி இணையம் வளர்காதல்
யானும் படித்து வியப்படைந்து வீணிலே
ஏனிவர்கள் கெட்டபெயர் ஏற்கின்றார் என்றெண்ணித்
தானிருந்தேன் ஆனாலும் தக்கமுடி வானபடி
காணும் எனவிருந்த போதினில் அந்நாட்டில்
வந்தது தேர்தலே வாணுதல் ஈனாவும்
சொந்தவூர் சென்றபின் சொல்கதையும் நின்றுபோய்,
அங்கே அரசியல் மாற்றம் அடைந்துவிட
பங்கம் பயவாமல் முற்றிற் றெனவிருந்தேன்;
இன்னும் அதேகதை செல்வதைக் காண்கின்றேன்!
என்னும் நிலையிலே இன்றென்ன ஆனதெனப்
பாதிப் படம்பார்த்து மீதியைப் பார்க்காத
நோதல் நிலையே ! நுதலழகி ஈனா
முகிலிடைச் சென்று மறைந்த நிலவாம்
அகிலம் அறிய வெளிப்பட்டால் அன்றி
கதைமுடி யாதஓர் காட்சியாய் நிற்க,
இதைஇனித் தேடுதல் இல்.
Click:
http://www.youtube.com/attribution_link?a=PKibMh_Xzac&u=/watch?v%3DhNCLQ_qu5vY%26feature%3Dem-subs_digest-vrecs
யானும் படித்து வியப்படைந்து வீணிலே
ஏனிவர்கள் கெட்டபெயர் ஏற்கின்றார் என்றெண்ணித்
தானிருந்தேன் ஆனாலும் தக்கமுடி வானபடி
காணும் எனவிருந்த போதினில் அந்நாட்டில்
வந்தது தேர்தலே வாணுதல் ஈனாவும்
சொந்தவூர் சென்றபின் சொல்கதையும் நின்றுபோய்,
அங்கே அரசியல் மாற்றம் அடைந்துவிட
பங்கம் பயவாமல் முற்றிற் றெனவிருந்தேன்;
இன்னும் அதேகதை செல்வதைக் காண்கின்றேன்!
என்னும் நிலையிலே இன்றென்ன ஆனதெனப்
பாதிப் படம்பார்த்து மீதியைப் பார்க்காத
நோதல் நிலையே ! நுதலழகி ஈனா
முகிலிடைச் சென்று மறைந்த நிலவாம்
அகிலம் அறிய வெளிப்பட்டால் அன்றி
கதைமுடி யாதஓர் காட்சியாய் நிற்க,
இதைஇனித் தேடுதல் இல்.
Click:
http://www.youtube.com/attribution_link?a=PKibMh_Xzac&u=/watch?v%3DhNCLQ_qu5vY%26feature%3Dem-subs_digest-vrecs