செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சட்டி.

சட்டி.


இந்தச் சொல் எங்ஙனம் வந்தது. சம்ஸ்கிருதமா? இல்லையே! பின் எப்படியாம்?

அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சூடேற்றுதல் என்று பொருள்.


அடு ‍>  அடுப்பு   நெருப்பு எரிக்குமிடம்.

அடு > அட்டி >சட்டி.

இப்போது சமர்ப்பித்தல். சபதம் என்னும் இடுகைகளைப் படித்துப்பாருங்கள்.

ஐயம் தீரும்.

எட்டி > செட்டி > செட்டியார்.  ( அரசரால் எட்டிப் பூமாலை சூட்டி  மதிக்கப்பெற்றவர் ) என்றனர் ஆய்வறிஞர். உயிர் முதலான‌ சொல், செகரம் பெற்றது காண்க.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

சமர்ப்பித்தல்

இனி சமர்ப்பித்தல் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலாக வந்த சொற்கள், பின் சகரம்,சகர வருக்க எழுத்தை முதலாகக் கொண்டு  மாறியது கண்டோம். இது சமர்ப்பித்தல் என்னும் சொல்லுக்கும் பொருந்தும்.


அமர்  ‍ >அமர்தல்
அமர்  >  அமர்த்தல்
அமர் >  அமர்ப்பித்தல்.

அமர்ப்பித்தல்  :  அதாவது  உங்கள் ஓலை  (வேண்டுகோள் கொண்டது)  அரசர் அல்லது அதிகாரி முன் "அமரச் செய்தல்" (அமர்வு பெறச் ) செய்தல்.

பின், இது சமர்ப்பித்தல் என்று  திரிந்துவிட்டது.

இன்னும் சில திரிபுகள்:

அமணர் >  சமணர்
.
அம்மட்டி > சம்மட்டி plants (not a hammer)

அம்+மதித்தல் > சம்மதித்தல்.  (அம் = அழகு , அழகாய் மதித்தல் -  எனவே ஏற்றுக்கொள்ளுதல் consent )
(இதை வேறுவிதமாக விளக்குவர் சிலர்)


அவை > சவை > சபை > சபா .

இவ்வளவு போதும், எடுத்துக்காட்டுக்கு !

அகரமுதலான சொற்கள் சகர முதலானதற்கு .......

சபதம்   (I , II ) என்னும் இடுகையையும் காண்க.      

சட்டக் கல்வியினால்

கல்லூரி கற்பித்த தென்னவோ---   சட்டக்
கல்வியினா லேதும் நன்மையோ?
கொல்லும் இனவெறி மற்றுண்டோ --- அறம்
கோரிடும் மானிடப் பற்றுண்டோ?

வாடிய மக்களைக் காப்பாற்ற--- ‍‍‍‍‍முன்
வந்திடு வானோஇங்  காமென?
கூடும் அறஆயம் மேல்சாற்றும்--- ஆணை
கூன்படச் செய்வானோ பூமியில்?