புதன், 20 அக்டோபர், 2010

வனமல்லியே

வனமல்லியே

(The substance for this poem came from another writer Mdm P.P.)

தாமே இருகால் நிற்க---முந்
தானை பிடித்திழுத்தாள்;
மூணு முடிபோட் டாளோ---இவள்
முழுஉரி மை பெறவே?
வீணே நிறுத்திவிட் டாளே--- அழகு
வீச்சில் சிரிப்பவளாம்!
நாணா தருகழைக் கின்றாள்-- அடாது!
நலமோ அவள்செயலே!!

ஆகுமா துணிச்சல் இதுவே-- இது
அடாவடி அன்றிவேறோ?
மாகவின் சேலையும் இதுவே --- என்
மன்னர் விழை பரிசே!!
நோகமுன் கவ்விடு கின்றாய் ---- அழ
காசை வனமல்லியே;
ஏகிடும் நானுனை மறவேன் ---- என்
இன்மனம் கவர்ந்தவளே

So sad... your beautiful voice மறைந்ததென்ன!

So sad, you went away, leaving behind your beautiful voice Reply with quote


இது பின்னணிப் பாடகி சுவர்ணலதா மறைந்தபோது பாடியது.

காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!


ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

fogive me.....

INFORMATION FOR VISITORS.

At the request of some of my visitors and friends, I tried before to contact them through the application facilities software herein by return post/ message. But hitherto I had not been successful. This was owing to the software error. So far I have not also been successful in fixing this problem

Please understand and forgive me. I shall try again some time later.

Sivamaalaa.