காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 11 டிசம்பர், 2008
திங்கள், 24 நவம்பர், 2008
போதுணா - போஜனா!!
boduna bho-jana bhojana food
எலு மொழியில் போடுணா, சங்கதத்தில் போஜனா, பாலியில் போஜனா.
போடுணா என்பதில் இறுதியில் இருப்பது உணா என்ற தமிழ்ச்சொல். உணா என்றால் உணவு.
இது போது + உணா என்ற தொடர். போது = பொழுது. இரவு வருமுன் என்பதை இச்சொல் உணர்த்துகிறது.
இது பின் போஜனா என்று திரிந்தது.
ஒவ்வொரு பொழுதும் (வேளையும்) உண்பது எனினும் ஆகும்.
போடப்படும் உணவு என்று சிலர் நினைக்கலாம். போடு+உணா.

வெள்ளி, 21 நவம்பர், 2008
நல்லமைதி நாட்டும்நாள் எந்நாள்?
irupaththI rAyiraththu n-URROdI rEzAm
innuyirtham maNNinukkAy Ikamsey thOrE!
eRikuNdAl vedikuNdAl innumvAn kuNdAl
iRan-thOrum izan-thuRuppin ElArum pallOr!
aRimaNdai arasinarkkE illAmai onRE
azisaNdai thodarthaRkE AmURRuk kaNNE.
n-arimaNdai n-Addathipan n-anmULai peRRu
n-ANpeRRu n-allamaithi n-Addumn-AL en-n-AL?
இருபத்தீ ராயிரத்து நூற்றோடீ ரேழாம்
இன்னுயிர்தம் மண்ணினுக்காய் ஈகம்செய் தோரே!
எறிகுண்டால் வெடிகுண்டால் இன்னும்வான் குண்டால்
இறந்தோரும் இழந்துறுப்பின் ஏலாரும் பல்லோர்!
அறிமண்டை அரசினர்க்கே இல்லாமை ஒன்றே
அழிசண்டை தொடர்தற்கே ஆமூற்றுக் கண்ணே.
நரிமண்டை நாட்டதிபன் நன்மூளை பெற்று
நாண்பெற்று நல்லமைதி நாட்டும்நாள் எந்நாள்?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)